மத்துகமையில் மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன !


மத்துகம பிரதேசத்தின் ஒவிட்டிகல ,படுகம மற்றும் படுகம கொலனி ஆகிய மூன்று கிராமங்கள் கொரோனா தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டன. இந்த கிராமங்களை சேர்ந்த பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை மினுவாங்கொடை கொரோனா தொற்றுப் பரவலில் இருந்து மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இவர்களில் 13 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் ,26 பேர் சமூகத்தில் இருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 Advertisement