மீசாலைக்கும் புத்தூர் சந்திக்கும் இடையில்

 

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற இ.போ.ச பேருந்து மோதியதில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


இன்று (15)  மாலை 6.20 மணியளவில் மீசாலைக்கும்  புத்தூர் சந்திக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

மீசாலையைச்  கோகுலன் லக்சிகன் வயது 15 என்ற மாணவனே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போ. சபை. சொந்தமான பேருந்து முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட வேளை சிறுவன் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முயற்சித்துள்ளார்.

(1/3)

இந்நிலையில் சிறுவனை காப்பாற்ற முயற்சித்த போது பேருந்து வீதியை விட்டு விலகி தண்டவாளத்தில் ஏறியது இதன்போது சாரதியின் முயற்சியினால் பயணிகள்  எதுவிதமான சேதமுமின்றி தப்பித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.Advertisement