#பானு அத்தையா. இந்தியாவின் முதலாவது ஒஸ்கார் விருது வென்றவர் மறைவு

 


இந்தியாவின் முதலாவது ஒஸ்கார் விருதை வென்ற பானுஅத்தையா 92 வது வயதில் காலமானார் காந்தி என்ற திரைப்படத்தில்  ஆடை வடிவமைப்பாளராகப் பணி புரிந்த இவருக்கு 1983ல் ஒஸ்கார் விருது பகிரப்பட்டது.

பானு அத்தையா னீ ராஜோபாத்யா (Bhanu Athaiya) (மராத்தி: भानु अथैय्या; பிறப்பு ஏப்ரல் 28, 1929) ஒரு இந்திய ஆடைகலன் வடிவமைப்பாளர். 1950 முதல் ஆடைகலன் வடிவமைப்பாளராக, 100 திரைப்படங்களுக்கு மேலாக பணிபுரிந்துள்ளார். இவர் இந்திய திரைப்பட இயக்குநர்கள் குரு தத், யஷ் சோப்ரா, ராஜ் கபூர் (இந்தி நடிகர்), அஷுடோஷ் கோவரிகெர் மற்றும் சர்வதேச இயக்குநர்கள் கான்ரட் ரூக்ஸ், ரிச்சர்ட் ஆட்டன்பரோ போன்றவர்களின் படங்களுக்கு ஆடைகலன் வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.


இவர் 1956இல் "சி. ஐ. டி."(1956) திரைப்படத்தில் ஆடைகலன் வடிவமைப்பாளராக அறிமுகமானார்.[1] அதைத்தொடர்ந்து இயக்குநர் குரு தத்தின் படங்களான "பியாஸா" (1957), "சாத்வின் கா சந்த்" (1960) மற்றும் "ஷாகிப் பீபி ஆர் குலாம்" (1962) போன்றவற்றில் பணிபுரிந்துள்ளார். 50 வருட தொழில் வாழ்க்கையில் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். 1982இல் காந்தி திரைப்படத்திற்காக அகாதமி விருது ஜான் மோலோவுக்கும் இவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.அகாதமி விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எனப் போற்றப்படுகிறார்.[1][2] இவர் இரண்டு முறை 1991[3] மற்றும் 2002[4] ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா, ஆடைகலன் வடிவமைப்பிற்காகப் பெற்றுள்ளார்.

மார்ச்சு,2010இல் இவர் "தி ஆர்ட் ஆஃப் காஸ்டியூம் டிசைன்" என்கிற புத்தகத்தை எழுதினார். இது ஹார்பெர் கோலின்ஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.[5] சனவரி 13, 2013இல் இப் புத்தகத்தின் ஒரு பிரதியை தலாய் லாமாவிற்கு கொடுத்தார்.

2012,பிப்ரவரி 23 இல் பானு அத்தையா தனது அகாதமி விருதினை "தி அகாதமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட் அன்டு சயின்ஸ்"ற்கு திருப்பித்தரவுள்ளதாக செய்தி வெளியானது. ஏனென்றால் அவரது மறைவிற்குப்பின் அவ்விருதை அவரது குடும்பத்தினரால் காப்பாற்ற முடியாது என்று அவர் நினைத்தார்.[8] திசம்பர் 15, 2012இல் இச் செய்தி உண்மையென வெளியானது.[Advertisement