ஆலையடிவேம்பிலும் தீபாவளிக் கொண்டாட்டம்


வி.சுகிர்தகுமார் 


உலகவாழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இலங்கை வாழ் இந்து மக்களால் இம்முறை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது.; 

இதற்கமைவாக அம்பாரை மாவட்ட மக்களும் தீபாவளியினை மிகவும் அமைதியான முறையில், பாதுகாப்பான, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் அம்பாரை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள ஆலயங்களிலும் மக்கள் பங்கேற்பின்றி தீபாவளி விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் பொதுமக்கள் அனைவரும் இல்லங்களில் தனிந்திருந்து குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாடத்தில் ஈடுபட்டனர்.

பாரம்பரிய முறைப்படி இல்லங்களின் முற்றத்தில் அழகிய கோலமிட்டு பொங்கலிட்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட குடும்ப உறுப்பினர்கள் பெரியோர்களின் ஆசிர்வாதத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

இதேநேரம் தலைத்தீபாவளியினை கொண்டாடும் புதுமணத்தம்பதிகளும் விமர்சையான முறையில் தமது முதலாவது தீபாவளியினை கொண்டாட முடியாத நிலையில் வீடுகளிலேயே தங்கியிருந்து உறவினர்களுடன் மகிழ்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நரகாசுரன் எனும்  மகா கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் வதம் செய்து அழித்தொழித்த பெருமைக்குரிய இத்திருநாளில் வேற்றுமை அகன்று நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் எனவும் கொரோனா எனும் கொடிய அரக்கன் நம் நாட்டில் இருந்து அழிந்து போகவேண்டும் எனவும் பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  Advertisement