கலைமகள் ஹிதாயா றிஸ்வி காலமானார்

 


சாய்ந்தமருதைச் சேர்ந்த கலைமகள் ஹிதாயா நேற்று, (23) திங்கட்கிழமை இரவு காலமானார்

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்
மகன் என்ன செய்றீங்க என்று கேட்கும் குரல் ஓய்ந்துவிட்டது.
முகப்புத்தகத்திலோ ஸ்டேடஸ் போடும் போது அதற்கு பின்னூட்டல் செய்து ஊக்கமளிக்கும் குரல் ஓய்ந்து விட்டது.
சாய்ந்தமருதூரைச் சேர்ந்த கலைமகள் ஹிதாயா மஜீத் ரிஸ்வி வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார்
நீண்ட காலமாகத் தமிழ் இலக்கியத் துறையில் ஈடுபட்டுவந்தவர் கலைமகள். இலங்கையில் மட்டுமன்ற, மலேசியா, தமிழகத்திலும் பல இலக்கியவாதிகளுடன் தொடர்புகளைப் பேணி வந்தவர். தடாகம் என்ற கலை, இலக்கிய வட்டத்தினூடாகத் தொடர்ச்சியாக இலக்கியத் துறையில் ஈடுபட்டுவந்தார் ஹிதாயா.
அன்னாரை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்வானாக!


Advertisement