சட்டபீட சிரேஸ்ட ஓய்வு நிலை விரிவுரையாளர் சிவபாதம் சேர், மறைவு
யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட, கொழும்புப் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் போன்றவற்றின்  சிரேஸ்ட விரிவுரையாளரானப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற  சிவபாதம் சேர், சிவபதம் அடைந்தார். அண்மைக் காலமாக சுகவீனமுற்றுக் காணப்பட்ட இவர், நேற்றைய தினம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று நள்ளிரவு காலமானார் .

இவர் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற ஓய்வு நிலை நீதிபதியும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சந்திரமணி விஸ்வலிங்கம் அவர்களின் கணவரும் ஆவார்.இவர்களுக்கு ஒரேயொரு மகன் உள்ளார். இவர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.

இவரது பிரிவின் துயரத்தில் வாடும், அவரது மனைவியும், சிரேஸ்ட சட்டத்தரணியுமாகிய சந்திரமணி விஸ்வலிங்கம், மற்றும் அவரது மகன் குடும்பம்ம்பத்தவருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!


#IsmailUvaizurRahmanAdvertisement