நிந்தவூரில்,இறை தூதரின் பிறந்த தினத்தை முன்னிட்டு

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலக திணைக்கள பணிப்பாளர், மற்றும் நிந்தவூர் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க  இன்றைய தினம்(4)  ஜூம்ஆ பள்ளிவாயல் முற்றத்தில் மர நடுகை நிகழ்வு  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் டீ.எம். அன்சார் நளீமி   நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லீமா பஸீர்  உள்ளிட்ட  ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந் நிகழ்கள் எதிர்வரும் தினங்களில் மஸ்திதுல் பிர்தௌஸ் ஜூம்ஆ பள்ளிவாசல்,பிரதேச செயலாளர் காரியாலயம் நிந்தவூர்,பிரதேச சபை நிந்தவூர்,நிந்தவூரிலுள்ள கோயில்கள்,அல் அஸ்ரக் தேசிய பாடசாலை,அட்டப்பள்ள விநாயகர் பாடசாலை, நிந்தவூர் ஆயுள் வேத வைத்தியசாலை,நிந்தவூர் பொது விளையாட்டு மைதானம் போன்ற இடங்களில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது