பாடசாலை மாணவன் மீது, வைத்தியர் துப்பாக்கி பிரயோகம்

 


மஹரகம – எருச்சல தர்மபால வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான மாணவன், வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மைதானத்தில் சில மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது, பந்து அருகிலுள்ள வீடொன்றின் வளாகத்திற்கு சென்றுள்ளது.

இந்த பந்தை எடுப்பதற்காக சென்ற வேளையில், குறித்த வீட்டின் உரிமையாளர் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் நடத்தியவர் வைத்தியர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.Advertisement