தொற்று நீக்கி தெளிக்கப்பட்டது



 (க.கிஷாந்தன்)

 

அட்டன் நகரில் பல இடங்களிலும் இன்று (23.11.2020) தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.  இதற்கான நடவடிக்கையை அட்டன் பொது சுகாதார பரிசோதகர் ஆர். பாலகிருஷ்ணன் வழிகாட்டலின் கீழ் இலங்கை செஞ்சிலுவை சங்கமும், நுவரெலியா கிளை காரியாலயமும், அட்டன் டிக்கோயா நகர சபை சுகாதார ஊழியர்களாலும் முன்னெடுக்கப்பட்டது.

 

அட்டன் நகரம் மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக அட்டன் நகரம் முழுவதும் தொற்று நீக்கி செய்யப்பட்து.

 

இதன்படி பஸ் தரிப்பிடம், பொதுசந்தை கட்டடத்தொகுதி, மக்கள் அதிகளவு கூடும் இடங்கள், வீதிகளிலுள்ள பாதுகாப்பு வேலி உட்பட பல இடங்களில் தொற்றுநீக்கி தெளிக்கப்பட்டு, கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், இரசாயண திரவம் தெளிக்கப்பட்டு வீதிகளும் சுத்தப்படுத்தப்பட்டன.