வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்



 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நெருங்கும் சமையத்தில், “வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு” அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.


முன்னதாக புதன்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் பேசிய அவர், “அமெரிக்க மக்கள் மீது நடத்தப்படும் மோசடி இது” என்று இந்த தேர்தலை குறிப்பிட்டார்.


அமைப்பு ரீதியிலான மோசடிக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் வாக்களிப்பதையும் நிறுத்துமாறு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.


பல மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு டிரம்ப் தரப்பு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


நெவாடாவில் வசிக்காதவர்களின் சுமார் 10,000 வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறி, குடியரசுக்கட்சியினர் வழக்கு தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.


அதிகளவில் அஞ்சல் வாக்குகள் அனுப்பப்பட்ட மாகாணங்களில் நெவாடாவும் ஒன்று. இதில் மோசடி நடைபெற வாய்ப்பிருப்பதாக பிரசாரம் செய்யும்போதே அதிபர் டிரம்ப் பேசினார்.


மோசடி நடைபெற்றது என பல முறை டிரம்ப் கூறினாலும் , அதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. வாக்கு எண்ணிக்கையை எதிர்த்து குடியரசுக்கட்சியினர் வழக்கு தொடரும் நான்காவது மாகாணம் நெவாடா. அடுத்து விஸ்கான்சினிலும் வழக்கு தொடர அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.