பிரதேச சபை உறுப்பினர்களிடையே மோதல் - 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி

 


ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும், மொட்டுக்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

மஹியங்கன பொலிஸ் நிலையத்திற்கு முன் இந்த மோதல் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இடம்பெற்றது.


மொட்டுக்கட்சியின் வசமுள்ள மஹியங்கன பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் 2ஆவது முறையாக தோல்விகண்டது.


இதனையடுத்து அங்கு இடம்பெற்ற மோதல் தொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.


இந்த சந்தர்ப்பத்திலேயே இன்னுமொரு மோதல் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.