நால்வருக்கு தலா 2000ஆயிரம் தண்டப்பணம்

 
வி.சுகிர்தகுமார் 0777113659  


  அக்கரைப்பற்றில் அனுமதிப்பத்திரமின்றி வியாபார நிலையங்களை திறந்து விற்பனையில் ஈடுபட்ட நால்வருக்கு தலா 2000ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்த அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.எம்.ஹம்சா மீண்டும் இவ்வாறு நடந்து கொண்டால் வியாபார நிலையம் சீல் வைக்கப்படும்; எனவும் எச்சரித்தார்.
கொரோனா தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி வியாபார நிலையங்களை திறந்து விற்பனையில் ஈடுபட்ட நால்வரை அக்கரைப்பற்று பொலிசார் கைது செய்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தியபோதே அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.
வியாபார நிலையங்களுக்கான அனுமதி பிரதேச செயலகம் மற்றும் சுகாதார துறையின் அனுமதியோடு கொரோனா சட்டதிட்டங்களுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட சிலருக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.