பாலமுனைப் பகுதியில்,பொலிஸ் அதிகாரி கொலை


காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


கொலைச் சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பபேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


அக்கரைப்பற்று – பாலமுனை பகுதியில் நேற்றிரவு (09) இடம்பெற்ற சம்பவமொன்றில் 35 வயதான கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


குறித்த கான்ஸ்டபிள் கடமையில் ஈடுபட்டிருந்த போதே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த நபரின் உறவினர் ஒருவரே கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


சம்பவம் தொடர்பிலான நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.


சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.Advertisement