ஜனாசா எரிப்புக்கு, எதிர்ப்புத் தெரிவித்து


#சாஜஹான்.
கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டாம் எனக்கோரி மாளிகாவத்தையிலுள்ள நீர் தாங்கி ஒன்றின் மேல் ஏறி ஒருவர் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
கொவிட் 19 தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யாமல் நல்லடக்கம்
செய்யுமாறு கோரியே இந்த நபர் இன்று (14) காலை முதல் மாளிகாவத்தை ரயில்வே வீட்டு வசதி வளாகத்தில் அமைந்துள்ள நீர் தாங்கியின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதாக தெரிய வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நபர்
நோன்பு நோற்ற நிலையிலேயே போராட்டத்தில் குதித்துள்ளதாகவும், உடலங்களை அடக்கம் செய்வதற்கான எழுத்து மூலமான உத்தரவை அரசிடம் எதிர்பார்ப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர்ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் பரவியதால் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.