சொகுசு காரில்,ஆடு கடத்தியவர், தேடப்படுகின்றார்

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


வீதி அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்றினை சொகுசு காரில் வந்த நபர்களால்   கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தலைமறைவான சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை கல்முனை பொலிஸ் பிரிவில் உள்ள பெரிய நீலாவணை மருதமுனை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 இவ்வாறு  மேய்ந்து கொண்டிருந்த ஆடு காணாமல் போய்உள்ளதாக ஆட்டின் உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

வீதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமராவில் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதன் மூலம் காரை அடையாளம் கண்டனர்.வெட்டப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் ஆடு மீட்கப்பட்டது. கார் கைப்பற்றப்பட்டு கடத்தல்காரர்களில்  ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மற்றவர் தலைமறைவாகி உள்ள நிலையில் இவரை பொலிஸார் தொடர்ந்து தேடுகின்றனர்.இச்சம்பவத்தில் கைதான சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை(7)  கல்முனை நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில்   14 நாட்கள்  விளக்கமறியலில்  வைக்கப்பட்டார்.

மேலும் குறித்த சம்பவத்தில் தலைமறைவான சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.


Advertisement