கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 199வது கொடியேற்ற விழா

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


நானிலம் போற்றும் நாஹூர் நாயகம், கருணைக் கடல், குத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக   கல்முனை மாநகர மக்களால் வருடா வருடம் நடாத்தப்படும்  கடற்கரை பள்ளிவாசலில்  199 வது வருட புனித கொடியேற்று விழாவின் கொடி ஏற்றும் நிகழ்வு  நாளை(14) வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வானது      அஸர் தொழுகையைத் தொடர்ந்து விஷேட துஆ பிராத்தனையுடன்   கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் அல்ஹாஜ் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில்  கொரோனா சுகாதார நடைமுறைக்கமைய  கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலில் இருந்து புனித கொடியானது    கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாகச் சென்று கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா மினாராக்களில்      கொடியேற்றப்பட்டு ஆரம்பமாகவுள்ளது.

 இவ் கொடியேற்றமானது தொடர்ந்து 12 நாட்கள் இடம்பெறுவதுடன்  இதில்    புனித மெளலித் ஷரீப் பாராயணம் பக்கீர் ஜமாஅத்தினரின் புனித றிபாஈ றாதிப்  உலமாக்களின் சன்மார்க்கச்சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி முதல் ஜனவரி 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.Advertisement