நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம்



 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


மலர்ந்துள்ள புதுவருடத்தின் முதல்நாள் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு  சிறப்பாக இடம் பெற்றது.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக   உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2021ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

இன்று(1) நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில்   காலை இந்நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில்  தேசியக் கொடியேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

 இச்சத்தியப்பிரமாண நிகழ்வில்    உத்தியோகத்தர்கள் அனைவரும் புதிய ஆண்டிற்கான   சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன்  புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.

இந்நிகழ்வில்    நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என். நவநீதராஜா   நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி  ஆர்.லதாகரன்   நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன் கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித் சமூர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ் .சிவம்   மேலதிக மாவட்ட பதிவாளர்  பி.நித்தியானந்தன்  கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்  அந்த அந்த பிரிவு கிராம சேவையாளர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் புதிய பட்டதாரி பயிலுநர்களினால் நிதி நடைமுறைகள் மற்றும் பெரியார்களின் வரலாறு நூல் வெளிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது