ஊக்குவிப்பு


 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  சமாதானம் சுபீட்சம் மற்றும் நிலையான அபிவிருத்தியினை இலக்காக கொண்டு செயற்படும் சிறந்த இலங்கையினை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியம் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக கியுமெடிகா மனிதநேய நிறுவனத்தின் உதவியுடன் கொவிட் 19 தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூவினத்தினையும் சார்ந்த வருமானம் குறைந்த பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் டெங்கு தாக்கத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கும் நுளம்பு வலைகளையும் இன்று வழங்கி வைத்தது.

இதன் ஒரு கட்டமாக அக்கரைப்பற்று ஸ்ரீ தம்மரெத்தின சிங்கள மகாவித்தியாலய மாணவ மாணவிகளுக்கும் ஒரு தொகுதி கற்றல் உபகரணம் மற்றும் நுளம்பு வலைகளை இன்று வழங்கி வைத்தனர்.

பாடசாலையின் அதிபர் டட்லி திசாராஜன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறந்த இலங்கையினை உருவாக்குவதற்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஏசி.எம்.றியாஸ்; கியுமெடிகா மனிதநேய நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஜனக மற்றும் ஒன்றியத்தின் உபதலைவரும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான ஏ.எம்.நௌபர்டீன் அமைப்பின் பொருளாளர் நூறுல்ஹக் அமைப்பின் உறுப்பினரும் பொறியியலாளருமான ஏ.எம்.அஸ்கி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் மற்றும் நுளம்பு வலைகளை வழங்கி வைத்தனர்.


இதேநேரம் திராய்க்கேணி தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஒலுவில் அல் அக்ஷா வித்தியாலயத்திலும் ஆலங்குளத்தில் அமைந்துள்ள றகுமானியா பாடசாலை சம்புநகர் அல்மினா பாடசாலை முல்லைத்தீவு அல் ஜெசீறா பாடசாலை உள்ளிட்;ட 100 மாணவர்களுக்கு குறித்த பொருட்களை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.