கலையரசனின் ஏற்பாட்டில்

  


வி.சுகிர்தகுமார் 0777113659  


  அம்பாரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா மற்றும் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொதிகள் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசனின் ஏற்பாட்டில் தொடர்ந்தும் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக லண்டன் வோள்தஸ்ரோ ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய  நிதியுதவியுடன் அகிலன் பவுண்டேசன் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட 170 பொதிகளே இன்று அக்கரைப்பற்று 7ஃ4 பிரிவில் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் இலங்கைக்கான அகிலன் பவுண்டேசன் அமைப்பின் பணிப்பாளர் லயன் வி.ஆர்.மகேந்திரன்  ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட  பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள்  கலந்து கொண்டு மக்களுக்கான உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மக்களது தேவைப்பாடுகள் தொடர்பிலும் அறிந்து கொண்டார்.
மேலும் எதிர்காலத்தில் குறித்த பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.


Advertisement