கிழக்கு மாகாண கலை இலக்கிய விழா

 


கிழக்கு மாகாண கலை இலக்கிய விழாவின் ஓர் அங்கமான பணப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று 15/01/2021 கல்முனை ( தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது
கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தினால் நடாத்தப்படவிருக்கும் இளம் கலைஞர்களுக்கான விருது பெற தகமை பெற்றவர்களது பெயர் விபரங்கள் கடந்த வாரம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டன


இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழ் மொழிமூல கலைஞர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வே இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது


இதன்போது வித்தகர் விருது, இளம் கலைஞர் விருது மற்றும் ஏனைய விருதுகளை பெறும் சுமார் 34 கலைஞர்களுக்கு காசோலைகளை வழங்கி வைக்கப்பட்டன


இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் எஸ் நவனீதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தார் இவ் விருது பெறும் கலைஞர்களை கௌரவிக்கும் கிழக்கு மாகாண கலாசார நிகழ்வு விரைவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்Advertisement