அதாஉல்லா எம்.பியை சந்தித்த வைத்தியசாலை அபிவிருத்தி குழு

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினருக்கும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவு க்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று(27) மாலை சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எல்.எம். அஜ்வத் தலைமையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் வைத்தியசாலையின் குறை,நிறைகள் தேவைகள் வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர்களுக்கு நடைபெறும் அநீதிகள் தொடர்பில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் எம்.ஐ.சதாத் விளக்கமளித்தார். இது தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்து பிராந்திய மக்களின் தேவைகளை நிபர்த்தி செய்யும் வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலையை மாற்றியமைக்க உறுதியளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தனது உரையில் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ..எம். அஸீஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உதவிப்பணிப்பாளர் வைத்தியர் றஜாப், சிரேஷ்ட வைத்திய அதிகாரி சனூஸ் காரியப்பர், தேசிய காங்கிரஸ் பிரமுகர்கள், சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தி குழு முக்கியஸ்தர்கள், ஊர்நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.