காத்தான்குடி, மாத்தளையின் சில பகுதிகள் விடுவிப்பு

 


#MJ.Faslin.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மட்டக்களப்பு மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் இன்று (09) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

இதற்கமைய, மட்டக்களப்பு – காத்தான்குடியின் 10 கிராம சேவையாளர் பிரிவுகள், மாத்தளை –  இஸ்மான் மாவத்தை மற்றும் மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் வரக்காமுர பகுதி என்பன இன்று (09) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.Advertisement