18 ரன் வித்தியாசத்தில் கொ #ஹெட்ரிக் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் #IPL2021

 


தீபக் சாஹர் முதல் 3 ஓவரில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். 31 ரன்னுக்குள் ஐந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்த கொல்கத்தா கதி அவ்வளவுதான் என நினைக்கும்போது, ஐந்தாவது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்த அந்த்ரே ரஸல் ருத்ர தாண்டவம் ஆடினார்.


இதனால் கொல்கத்தா 10.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. அந்த்ரே ரஸல் 21 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் விளாசினார். இனிமேல் சென்னை சூப்பர் கிங்ஸ் நிலை திண்டாட்டம்தான் என நினைக்கையில், 12-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அந்த்ரே ரஸல் அஜாக்ரதையாக போல்டானார். இதனால் சென்னை வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். போட்டி அப்படியே சென்னை பக்கம் திரும்பியது.

அந்த்ரே ரஸல் 22 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சரி... இத்தோடு சென்னை எளிதாக வெற்றி பெறும் என நினைத்தால் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 24 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.


பேட் கம்மின்ஸ்

யாரும் எதிர்பார்க்காத வகையில் பேட் கம்மின்ஸ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். சாம் கர்ரன் வீசிய ஒரே ஓவரில் நான்கு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 30 ரன்கள் விரட்டினார். பேட் கம்மின்ஸ் 23 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

இருந்தாலும் அவரால் தனி நபராக அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவரில் 202 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்-அவுட் ஆனது.