யார் உதவி செய்கின்றார்ளோ அவர்களுக்கே எமது வாக்குகள்


 வி.சுகிர்தகுமார் 0777113659

இளைஞர்களும் விளையாட்டுக்கழகங்களும் அரசாங்கத்துடனும் விளையாட்டுத்துறை அமைச்சுடனும் இணைந்து செயலாற்றும்போது மாத்திரமே எமது பிரதேச விளையாட்டுக்கழகங்களின் தேவையினை பூர்த்தி செய்ய முடியும் என நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகனால் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு இணைந்து செயற்படுகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் உதவியோடு அம்பாரை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானங்கள் புனரமைக்கப்படுவதுடன்; பிரதேச விளையாட்டு கழகங்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் அவரால்; உறுதிமொழி வழங்கப்பட்டது.
அக்கரைப்பற்று ஜங்பிளவர் விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கும் நீர் வழங்கல் அமைச்சின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் பியசேன கிருத்திகனுக்கும் இடையிலான சந்திப்பொன்று பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின் போது ஜங்பிளவர் விளையாட்டுக்கழக உறுப்பினர்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதில் தமது கழகத்தின் மைதான அபிவிருத்தி தொடர்பில் தாம் பலராலும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் இதற்கு யார் உதவி செய்கின்றார்களோ அவர்களுக்கே தமது கிராமத்தில் வாக்குகள் எதிர்காலத்தில் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதற்கு பதிலளித்த கிருத்திகன் நிட்யமாக கழகத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முடிந்தவரையிலான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்.
இதேநேரம் கழகங்களும் நன்றி மறவாமல் அரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் எனவும் கேட்க்கொண்டார்.
இச்சந்திப்பில் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.