வர்த்தக நிலையங்களை திறப்பதற்கும் அனுமதி இல்லை





நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணி முதல் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ள பயணக்கட்டுப்பாட்டின் போது எந்தவொரு நபருக்கும் வெளியில் நடமாட அனுமதி வழங்கப்பட மாட்டாது என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டிலுள்ள பொதுமக்கள் தமது வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என, அவர் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -

அத்துடன், வர்த்தக நிலையங்களை திறப்பதற்கும் முழுமையான அனுமதி மறுக்கப்படுவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய பயணங்களுக்காக மாத்திரமே பயண அனுமதி வழங்கப்படுவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு போன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதற்கான மருந்தகங்கள் விநியோக சேவையை முன்னெடுக்க முடியும் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த 3 நாட்களிலும் இந்த நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகளுக்கு முழுமையாக அனுமதி மறுக்கப்படுவதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடையாள அட்டை இலக்கத்துக்கு அமைய பொருட் கொள்வனவில் ஈடுபடும் நடைமுறை இந்த 3 நாட்களுக்கு பொருந்தாது எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.