அத்தியாவசிய வழக்குகளை விசாரிக்கத் தீர்மானம்


 


அத்தியாவசிய வழக்குகளை மாத்திரம் திறந்த நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமையினை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினரோ அல்லது அவர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகளோ நகர்த்தல் பத்திரத்தினூடாக விடயங்களை முன்வைக்கும் பட்சத்தில், அதன் அத்தியாவசியம் கருதி மாத்திரம் வழக்கு விசாரணையை முன்னெடுக்கவுள்ளதாக நீதிமன்ற சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏனைய வழக்கு விசாரணைகளை இரு தரப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு அழைப்பு விடுக்காமலே, பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஏனைய நீதிமன்றங்களின் செயற்பாடுகள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனடிப்படையில், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட ஏனைய அனைத்து நீதிமன்றங்களின் நடவடிக்கைகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே முன்னெடுக்கப்படவுள்ளதாக நீதிமன்ற சேவை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது