மேல் மாகாணத்தைச் சேர்ந்த எந்தவொரு நபருக்கும் தமக்கு ஏற்ற இடத்தில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு

 


மேல் மாகாணத்தைச் சேர்ந்த எந்தவொரு நபருக்கும் தமக்கு ஏற்ற இடத்தில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக இன்று முதல் விசேட நடைமுறையொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல் மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் தெரிவு செய்யப்பட்ட முப்படை தடுப்பூசி நிலையங்களில் தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் தெரிவு செய்யப்பட்ட இராணுவ தடுப்பூசி நிலையங்களில் தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும்.

credit: ada derana

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் இரண்டாவது கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

விபரம் வருமாறு:

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொதுமக்களுக்கான முக்கியமான வேண்டுகோள்…..

இன்று 05.07.2021 திங்கட்கிழமை J/61,
J/62,J/63,J/66 கிராம அலுவலர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 60வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி காலை 8.00 மணிக்கு கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயத்தில் போடப்படவுள்ளதால் அப்பிரிவுகளைச் சேர்ந்த முதியவர்களை தவறாது தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு யாழ்ப்பாண மாவட்ட செயலகம் கேட்டுக் கொள்கிறது.