.கலைஞர் கருணாநிதியின் மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்


 (


க.கிஷாந்தன்)


முன்னாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அமரர்.கலைஞர் கருணாநிதியின் மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் இலங்கையில் கொழும்பு பிரைட்டன் விருந்தகத்தில் நேற்று மாலை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் கலைஞர் கருணாநிதியினால் இயக்கப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதுடன், திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து வருகை தந்திருந்தவர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கலைஞர் கருணாநிதியின் நினைவு பேருரையும், விசேட உரையையும் ஸ்ரீலங்கா மூஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வை இலங்கை இந்திய செய்தி தொடர்பாளர் மணவை அசோகன், கலைச்செல்வன், தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் உட்பட்ட குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்வில் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.பி. குருசாமி, குமர குருபரன், கொழும்பு மாநகர சபையின் பிரதி முதல்வர், எதிர்கட்சி தலைவர், மலையக மக்கள் முன்னணியின் செயலாளரும், பேராசியருமான எஸ்.விஜயசந்திரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொழும்பு அமைப்பாளர் திரு.கே.செல்லசாமி உட்பட பத்திரிகையாளர்கள், வர்த்தகர்கள், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

கலைஞர் கருணாநிதி 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அமர்த்துவமானார்.