கற்றாளை உற்பத்தியின் மூலம் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்களினதும் அறிமுக விழா



 வி.சுகிர்தகுமார் 0777113659 


  ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள 'சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் நச்சுதன்மையற்ற நாட்டை உருவாக்குவோம்' எனும் தொனிப்பொருளில்  அம்பாரை மாவட்டத்தில் சேதனப்பசளையை மாத்திரம் பயன்;படுத்தி  செய்கை பண்ணப்பட்ட கற்றாளை உற்பத்தியின் மூலம் தயாரிக்கப்பட்ட பல்வேறு பொருட்களினதும் அறிமுக விழா நேற்று அக்கரைப்பற்று- அம்பாரை வீதியில் அமைந்துள்ள திட்டக்காரியாலய மண்டபத்தில்  நடைபெற்றது.
   
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால்  கடந்த வருடம் இறக்காமத்தில் வைபவரீதியாக  ஆரம்பித்து வைக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம்  மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகப்பிரிவின் பின்தங்கிய கிராமங்களில் வறுமைக்கோட்டில் வதியும் சமூர்த்தி பயனாளிகள் இச்செய்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஊக்குவிப்பு கடன்  வழங்கப்பட்டுள்ளதோடு விவசாய திணைக்களத்தினால் அவ்வப்போது ஆலோசனைகளும் வழங்கப்பட்டுவருகின்றன.
 இவ்வாறு பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் அறுவடை மூலமாக பெறப்பட்ட  கற்றாளை மூலம் உற்பத்திசெய்யப்பட்டபொருட்களின் அறிமுக விழாவில் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான டபிள்யு.டீ. வீரசிங்க பிரதம அதிதியாகக்கலந்து கொண்டார். .
 
திட்ட பணிப்பாளரும் இணைப்பாளருமான ஆசாத் எம்.அலியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி  மாவட்ட பணிப்பாளர்  எம்.எஸ்..எம் சப்ராஸ், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் எம்.ஹனிபா, அக்கரைப்பற்று பிரதேச சபைத் தலைவர் எம்.எ.றாசிக் திருக்கோவில் உதவிபிரதேச செயலாளர் க.சதிசேகரன் உட்பட பலபிரமுகர்களும் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்கலிருந்தும் கற்றாளை செய்கையாளர்களும் கலந்து கொண்டனர்.
 
இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பின வீரசிங்க கற்றாளை செய்கையில் ஈடுபட்டோரை  வாழ்த்தியதோடு சமூர்த்தி பயனாளிகள் இம்முயற்சியில் மிக  உற்சாகதுடன் ஈடுபட்டு தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
 
இந்நிகழ்வில் திட்ட பணிப்பாளரும் இணைப்பாளருமான ஆசாத் எம்.அலியார் இத்திட்டம் தொடர்பாக உரையாற்;றியதுடன் கலந்து கொண்டவர்களுக்கு உற்பத்தி பொருட்களையும் வழங்கி வைத்தார்.

இதன் பின்னராக கற்றாளை உற்பத்தி தொடர்பில் செய்யப்படும் இடத்திற்கு அழைத்துச்சென்று விளக்கமளித்தார். முற்றும் முழுதாக சேதனப்பசளை மூலம் குறித்த கற்றாளை உற்பத்தி இடம்பெறுவதாகவும் இதன் மூலம் உள்நாட்டு வருமானத்தை ஊக்குவிப்பதுடன் வெளிநாட்டு வருமானத்தையும் பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.....