தலிபான்கள் அமைப்பின் ஆதரவாளர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம் ; பேஸ்புக் அதிரடி


 ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் மத கோட்பாடுகளை கடுமையாக அமல்படுத்துபவர்கள் என்பதால், பலர் நாட்டை விட்டு தப்ப முயன்று வருகிறார்கள். 

தப்பிச்செல்லாத மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். பரவலாக அச்சம் நிலவி வருகிறது. தலிபான்கள் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக சர்வதேச அளவில் தலைப்புச்செய்தியாக வலம் வரு நிலையில், அந்த அமைப்பின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக நேற்று பேஸ்புக் கூறியிருந்தது. “தலிபான்" அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு. எங்கள் நிறுவனத்தின் ஆபத்தான அமைப்புகளின் பட்டியலிலும் தலிபான் இடம் பெற்றுள்ளது. அதனால் அந்த அமைப்பை ஊக்கப்படுத்தும் கருத்துக்களை தடை செய்து வருகிறோம்” என தெரிவித்தது. 

இந்த நிலையில், தலிபான் மற்றும் அவர்களுக்கு ஆதரவான வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்படுவதாக வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.

நன்றி: தினத்தந்தி