பஸ்களில் பயணிப்போருக்கு இன்று முதல் புதிய நடைமுறை


 


நாட்டில் இன்று (09) முதல் பஸ் போக்குவரத்துக்கள் வழமை போன்று இடம்பெறும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.


கொவிட் பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே, கடந்த சில தினங்களாக பஸ் போக்குவரத்துக்கள் இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

எனினும், ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகளை அழைத்து செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டதை அடுத்தே, பஸ் போக்குவரத்துக்களை வழமைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.


மாகாணங்களுக்கு இடையில், வேலைக்கு செல்வோர் மாத்திரமே பஸ்களில் பயணிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.


இதேவேளை, பஸ்களில் பயணிக்கும் உத்தியோகத்தர்கள், தமது அலுவலக அடையாளஅட்டையை தம்வசம் வைத்திருத்தல் கட்டாயமானது என அவர் தெரிவிக்கின்றார்.


பஸ்களின் நடத்துநர் கோரும் பட்சத்தில், அலுவலக அடையாளஅட்டையை காண்பிக்க வேண்டும் என்பதுடன், எதிர்வரும் தினங்களில் பொலிஸார் பஸ்களில் திடீர் சோதனைகளை நடத்தவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.