#ITN முன்னாள் தொழில்நுட்பவியலாளர், அக்கரைப்பற்று MB.நைஸர் மறைவு



 அக்கரைப்பற்று -06ம் குறிச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட  MB.நைஸர் -(53) (Qatar Telecom) கட்டாரில் சற்று முன்னர் காலமானார். அக்கைரைப்பற்று லைற்நிங் கழக முன்னாள் விளையாட்டு வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இலங்கை சுயாதீன தொலைக்காட்சியில் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பல வருடங்கள் பணிபுரிந்தார். 


கடந்த ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக இவர் கடல் கடந்த நாட்டில் தொழில்நுட்ப உத்தியோகத்தராகப் பணிபுரிந்து வருகின்றார்.


இவரது பிரிவால் துயருறும் இவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.