பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் சேவைகள் இன்று முதல்


 


வி.சுகிர்தகுமார் 0777113659   




  கடந்த 4 நாட்களாக வைத்திய சேவைகள் வழங்கப்படாமல் மூடப்பட்டிருந்த அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் சேவைகள் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனின் நடவடிக்கை காரணமாக இன்று முதல் வழமைக்கு திரும்பியதுடன் திங்கள் முதல் வைத்திய சேவைகள் இடம்பெறவுள்ளது.

பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணனின் தலைமையிலான அரச வைத்திய அதிகாரிகள் கல்முனை பிராந்திய கிளை சங்கத்தின் தலைவர் எம்.சி.எம்.மாஹிர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் எம்.வை.எம்.மாஹிர் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட வைத்தியர் யு.எல்.எம்.சஹீல் வைத்தியர் ஜாரியா கல்முனை உதவி பொலிஸ் அத்தி;யட்சகர் பி.எம்.ஜயலத் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கிராம மக்கள் இணைந்து இன்று வைத்தியசாலையில் மேற்கொண்ட கலந்துரையாடலின் பயனாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் யு.எல்.எம்.சகீல் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் பொதுமகன் ஒருவரால் தாக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்பின்மை காரணமாக அவர் பணியிலிருந்து விலகிக் கொண்டார்.
இந்நிலையில் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரும் ஊழியர்களும் மேற்கொண்ட உரிய நடவடிக்கை காரணமாக குறித்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

ஆனாலும்; குறித்த வைத்தியசாலையில் தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை என தெரிவித்து வைத்தியர் வைத்தியசாலைக்கு சமூகமளிக்காத நிலையில் வைத்தியசாலையும் மூடப்பட்டது. இதனால் சிகிச்சைக்காக அங்கு கைக்குழந்தைகளுடனும் நோயுடனும் தூரப்பிரதேசங்களில் இருந்து சென்ற பலர் இன்று ஏமாற்றதுடன் வீடு திரும்பினர்.
குறித்த விடயம் தொடர்பாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்திற்கு பலராலும் முன்கொண்டு செல்லப்பட்டதுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் வைத்தியசாலையின் சேவைகளை வழமைக்கு கொண்டுவர இணக்கப்பாடு காணப்பட்டது.
24 மணிநேரமும் வைத்தியசாலைக்கு பாதுகாப்பு வழங்கல் குற்றம் செய்தவருக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தல் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் நடந்து கொள்ளல் வைத்தியசாலை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கல் அத்தோடு குறித்த பகுதியில் வாழும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கல் போன்ற பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் வைத்தியர் சேவைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்தார். இதனால்; வைத்திய சேவைகள் வழமைக்கு திரும்பியது.

இதேநேரம் பல விட்டுக்கொடுப்புக்களின் அடிப்படையில் வைத்திய சேவைகள் இடம்பெற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடந்தால் வைத்திய சேவைகள் யாவும் ஸ்தம்பிதம் அடையும் என பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் கூறினார்

எவ்வாறாயினும்  தாமும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வாழும் பொதுமக்களும் சம்பவம்  தொடர்பில் கவலை அடைந்துள்ளதுடன் சம்பவத்திற்கு எதிராக கடும் கண்டத்தை தெரிவிப்பதாகவும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் கூறினர்.
இதேநேரம் வைத்தியரை தாக்கியவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் குறித்த பிரதேச மக்களை அழைத்து வந்து வைத்தியரிடம் மன்னிப்பு கேட்க வைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக பனங்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஆர்.சுவர்ணராஜ் தலைமையிலான குழுவினர்; குறிப்பிட்டனர்.