ஆக்கசு (AUKUS அல்லது Aukus) ஒப்பந்தம்


 


ஆக்கசு (AUKUS அல்லது Aukus) என்பது ஆத்திரேலியா (AUS), ஐக்கிய இராச்சியம் (UK), ஐக்கிய அமெரிக்கா (US) ஆகிய நாடுகளின் முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பிற்காக 15 செப்டம்பர் 2021 அன்று செய்து கொள்ளப்பட்ட இராணுவக் கூட்டணி ஒப்பந்தம் ஆகும்.இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மூன்று நாடுகளுக்கிடையேயான மிகப்பெரிய பாதுகாப்பு திட்டம் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.ஆக்கஸ் திட்டப்படி, பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஆத்திரேலியாவின் இராணுவப் பாதுகாப்பிற்கு அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் அணுசக்தியால் இயக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்கவும், மேம்படுத்தவும் உதவிகள் செய்யும்.

ஆக்க்ஸ் திட்டத்திற்கான கூட்டு அறிவிப்பில் வேறு நாடுகளை இத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து, மேற்படி மூன்று நாடுகளின் தலைவர்கள் குறிப்பிடவில்லை. இருப்பினும் அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ளவே ஆக்சஸ் திட்டம் உருவாக்கப்பட்ட கூறப்பட்டுள்ளது. [6]


ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை கட்டுவதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ள ஆக்கஸ் ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. அது மட்டுமில்லாமல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான ஷரத்துகளும் இந்த ஆக்கஸ் ஒப்பந்தத்தில் வருகின்றன. பல பதிற்றாண்டுகளில் ஆஸ்திரேலியா எட்டிய மிகப்பெரிய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் இது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.


ஆக்கஸ் திட்டத்தின் கீழ் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உளவுத் தகவல்கள், சைபர் பாதுகாப்பு, அணு ஆயுதங்கள், நீண்ட தூரம் எறியப்படும் ஏவுகணைகள், கடலடி பாதுகப்பை வலுப்படுத்தும் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும் என்றும், மேலும் திட்டம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய நலன்களுக்கு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்து மற்றும் கனடா நாடுகளின் உளவுத் துறைகளும் இத்திடத்திற்கு உளவு வேலைகள் பார்க்கும்