சேதனப்பசளை உற்பத்தி தொடர்பிலாக பட்டதாரி பயிலுனர்களை தெளிவூட்டும் செயன்முறை


 


வி.சுகிர்தகுமார் 0777113659 

  

ஜனாதிபதியின் சௌபாக்கிய செயற்றிட்டத்திற்கு அமைய சுபீட்சத்தை நோக்கிய நாடு எனும் திட்டத்தின் கீழ் சேதனப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக சேதனப்பசளை உற்பத்தி தொடர்பிலாக பட்டதாரி பயிலுனர்களை தெளிவூட்டும் செயன்முறை பயிற்சி வகுப்பு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற செயன்முறை பயிற்சி வகுப்பில் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய நிலைய பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.நிப்றாஸ் வழிகாட்டலில் விவசாய போதானாசிரியர்களான எம்.கோகுல்ராஜ் மற்றும் எம்.எச்.எம்.சஜாத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பயிற்சியினை வழங்கி வைத்தனர்.

அம்பாரை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலுனர்கள் கண்காணிப்பின் கீழும் சேதனப்பசளை தயாரிக்கும் பணி மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.

இதன் ஒரு கட்டமாகவே ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் பிரதேச செயலாளர் பணிப்பின் பேரில் சேதனப்பசளை தயாரிக்கும் திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்பயிற்சி வகுப்பில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் கணக்காளர் க.பிரகஸ்பதி  உள்ளிட்ட பிரதேச செயலக உயர் அதிகாரிகள் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள்  என பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அக்கரைப்பற்று கிழக்கு விவசாய நிலைய பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.நிப்றாஸ் சேதனப்பசளை தயாரிப்பு தொடர்பான பல்வேறு விளக்கங்களை விரிவாக வழங்கினார்.