அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரக் கடற்கரை பிரதேசம் இன்று தூய்மைப்படுத்தப்பட்டது


 


(வி.சுகிர்தகுமார்)Dlel

LP


 அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவிற்கமைவாக கடல் சூழலை பேணிப்பாதுகாப்பதற்காக பல்வேறு அரச திணைக்களங்களால்; நாடளாவிய ரீதியில் அவ்வப்போது பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரக் கடற்கரை பிரதேசம் இன்று தூய்மைப்படுத்தப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட தூய்மைப்படுத்தும் சிரமதான நிகழ்வில் 241ஆம் படைப்பிரிவின் இராணுவத்தினர் பிரதேச செயலக அதிகாரிகள் கிராம உத்தியோகத்தர் சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் சமுர்த்தி பயனாளிகள் விளையாட்டுக்கழகங்கள் இளைஞர் சேவை மன்றத்தினர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ராம் கராத்தே சங்க வீரர்கள் பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று இராணுவ முகாம் முன்பாக ஒன்று சேர்ந்த அனைவரும் பிரதேச செயலாளரால் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு மூன்று பகுதிகளில் சிரதானத்தை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனடிப்படையில் அக்கரைப்பற்று நாகதம்பிரான் ஆலயம் தொடக்கம்  சின்னமுகத்துவாரம் வரையிலான கடற்கரை பிரதேசம் சுத்தம் செய்யப்பட்டன.
இதன்போது  தேங்கிகிடந்த பிளாஸ்டிக் போத்தல்கள் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை அகற்றும் பணியும் முகத்துவாரத்தில் சூழந்திருந்த பற்றைகளை அகற்றும் பணியும் நடைபெற்றது.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட கழிவுப்பொருட்கள் பிரதேச சபையின் வாகனம் மூலமாக அகற்றப்பட்டது