மொரட்டுவை மாநகர சபை முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ உள்ளிட்ட 8 பேர், இன்றைய தினம் நீதிமன்றில்




 


கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மொரட்டுவை மாநகர சபை முதல்வர் சமன்லால் பெர்னாண்டோ உள்ளிட்ட 8 பேர், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

அவர்களில் சீதாவாக்கை பிரதேச சபையின் தவிசாளர் ஜயந்த ரோஹன மற்றும் களனி பிரதேச சபையின் தவிசாளர் மஞ்சுள பிரியந்த ஆகியோரும் அடங்குகின்றனர்.

அதேநேரம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கரந்தெனிய பிரதேச சபையின் உறுப்பினரும், மற்றுமொருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனிடையே, காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நவ சிங்கலே அமைப்பின் டேன் பிரியசாத் நேற்று கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இவ்வாறு இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.