அக்கரைப்பற்றில் விபத்தினால் மரணம் ஏற்படுத்திய சிறுவருக்கு, பரீட்சை எழுத அனுமதி




அக்கரைப்பற்றில் விபத்தினால், அண்மையில், முச்சக்கர வண்டிச் சாரதிக்கு  உயிராபத்தை ஏற்படுத்திய   16 வயது மாணவனை, சிறுவர் பாதுபாப்பு இல்லத்தலிருந்தவாறு  க.பொ.த சா/த  பரீட்சை நிலையத்திற்கு வந்து, பரீட்சை  எழுதுவதற்கு அக்கரைப்பற்று நீதிமன்ற கெளரவ நிதவான் திருமதி. அபிநயா சூரியசிவா இன்நைய  தினம்  உத்தரவிட்டுள்ளார்

குறித்த மாணவன் இன்றைய தினம்  சிறுவர் பாதுகாப்பு இல்லத்திலிருந்து சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தரால், அக்கரைப்பற்று நீதிமன்றில் இன்று அஜர்படுத்தப்படுத்தப்பட்டார்.. 

குறித்த சந்தேக நபர், இம்முறை க.பொ.த (சா/ த) பரிட்சைக்குத் தோற்றும் மாணவர் என்பதாலும்,16 வயது நிரம்பப் பெற்றவர் என்பதனாலும், இக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.