சமுர்;த்தி பயனாளிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்




 .சுகிர்தகுமார்   

வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் நோக்கில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கோழிக்குஞ்சுகள் வழங்கி அதன் மூலம் சமுர்;த்தி பயனாளிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாரனின் மேற்பார்வையில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பிரதேச செயலகத்தின் கருத்திட்ட முகாமையாளர் க.சத்தியப்பிரியன் தலைமையில் இன்று (26) இடம்பெற்ற கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் மற்றும் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி சிவப்பிரியா சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 660 கோழிக்குஞ்சுகளை வழங்கி வைத்தனர்