கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை ஜுன் 12ஆம் திகதி திறக்கப்பட்டு 45000 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு

(சுகிர்தகுமார்)

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை ஜுன் 12ஆம் திகதி திறக்கப்பட்டு ஜுன் மாதம் 25ஆம் திகதி மூடப்படும் என அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம் எ. டக்ளஸ் தெரிவித்தார்
யாத்திரை தொடர்பாக உகந்தை முருகன் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற சமயத்தலைவர்கள் அரச திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாகவே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்

நிறைவேற்றப்பட்டன.
கதிர்காம பாதயாத்திரைக்கான குமண ஊடான காட்டுவழிப்பாதை ஜுன் 12ஆம் திகதி காலை உகந்தை முருகன் ஆலயத்தில் இடம்பெறும் பூஜையை தொடர்ந்து 7 மணியளவில் திறக்கப்பட்டு ஜுன் மாதம் 25ஆம் திகதி மூடப்படும் எனவும் இக்காலத்தில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்படும் பாதை பிற்பகல் 3 மணிக்கு மூடப்படும் எனவும் குறிப்பிட்டனர்.

இதன் பின்னராக ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டதன் பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கதிர்காம பாதயாத்திரைக்கான குமண ஊடான காட்டுவழிப்பாதை ஜுன் 12ஆம் திகதி காலை உகந்தை முருகன் ஆலயத்தில் இடம்பெறும் பூஜையை தொடர்ந்து 7 மணியளவில் திறக்கப்பட்டு ஜுன் மாதம் 25ஆம் திகதி மூடப்படும் எனவும் இக்காலத்தில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்படும் பாதை பிற்பகல் 3 மணிக்கு மூடப்படும் எனவும் குறிப்பிட்டனர்.
அதுபோல் பாதயாத்திரிகர்களுக்கான பாதுகாப்பு சுகாதார சேவைகள்  குடிநீர் வசதி போன்றவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றனர்.
குடிநீரை வழங்க லாகுகல பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் சிவதொண்டர் அமைப்பு மற்றும்  தம்பிலுவில்; சைவநெறி கூடம் மற்றும் சேவற்கொடியோன் உள்ளிட்ட அமைப்புக்களும்; பொறுப்பேற்றனர்.
மேலும் பாதயாத்திரிகர்கள் சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டனர்.