அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கும் புதிய பஸ் வண்டி




 


வி.சுகிர்தகுமார் 0777113659  

 அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கும் புதிய பஸ் வண்டி ஒன்றினை சஜித் பிரேமதாசா அவர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வழங்கி வைக்கின்றார் என ஜக்கிய மக்கள் சக்தியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளரும் கல்வி ஊழியர் சங்கத்தினுடைய இணைப்புச் செயலாளருமான வெ.வினோகாந்த் கூறினார்.
புதிய பஸ் வண்டி கையளிக்கும் கலந்துரையாடலொன்று அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் நேற்று (22)நடைபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் தற்கால எதிர்க்கட்சி தலைவரும் எதிர்கால நாட்டின் ஜனாதிபதியுமான சஜித் பிரேமதாசா பிரபஞ்சம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக பாடசாலைகளுக்கு தேவையான பஸ் வண்டிகள் மற்றும் இதர கல்வி உபகரணங்களையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றார்.
இதன் அடிப்படையில் அம்பாரை மாவட்டத்திலும் மூன்று பாடசாலைகளுக்கு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சிங்கள பாடசாலைக்கும் ஒரு முஸ்லிம் பாடசாலைக்கும் வழங்கினார். அடுத்த கட்டமாக தமிழ் பாடசாலையான அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கும் வழங்கவுள்ளார்.
இம்மாதம் 28ஆம் திகதி இந்நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இதேநேரம் இலங்கையில் கல்வி மற்றும் சுகாதாரத்துறை பின்னடைந்து செல்கின்றது என கூறிய அவர் ஊழல்களும் இடம்பெறுகின்றது என்றார். இதனை கருத்திற்கொண்ட சஜித் பிரேமதாசா கல்வி அபிவிருத்தி மட்டுமல்லாது மிக முக்கியமான சுகாதாரத்துறைக்கும் சுவாசம் எனும் வேலைத்திட்டத்தின் ஊடாக பல பங்களிப்புக்களை வழங்கி வருகின்றார் என கூறினார்.
பஸ் வண்டி கையளிக்கும் நிகழ்வு தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலொன்று அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிலையில் இதில் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்கத்தினர் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வு தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.