கொடியேற்றம்





வி.சுகிர்தகுமார் 0777113659 


 கிழக்கு மாகாணம் அம்பாரை  மாவட்டத்தில்  பிரசித்தி பெற்ற பழம்பெரும் சிவாலயங்களில் ஒன்றான அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான வருடாந்த  மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றம் இன்று (15) நடைபெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற கிரியைகளை தொடர்ந்து கொடிச்சீலை எடுத்து வருவதற்கான கிரியைகள் இடம்பெற்றதுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடிச்சீலையும் எடுத்துவரப்பட்டது.

பின்னர் நடைபெற்ற யாக பூஜையுடன் பிரதான கும்ப பிரதட்சனையுடன் கொடிச்சீலையும் உள்வீதி வலமாக எடுத்து வரப்பட்டது.

தொடர்ந்து கொடிமரத்திற்கான அபிசேக பூஜைகள் நடைபெற்றதுடன்; பக்தர்களின் அரோகரா எனும் வேண்டுதலுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றமும் இடம்பெற்றது.

பின்னராக மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரரை அலங்கரிக்கப்பட்ட தேரில் இருத்தி அடியார்களினால் வெளி;வீதிவலமாக சுமந்து சென்றதுடன் வசந்த மண்டபத்தில் அமர்த்தப்பட்டு விசேட பூஜைகளும் இடம்பெற்றது.

இன்று (15) கொடியேற்றமுடன் ஆரம்பமான பிரம்மோற்சவப் பெருவிழாவின் சத 108 சங்காபிசேகம் 23ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் 24ஆம் திகதி இடம்பெறும் தீர்த்தோற்சவத்துடன் மாலை கொடியிறக்கமும் 25ஆம் திகதி இடம்பெறும் பூங்காவனத்திருவிழாவுடனும் 26ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடனும்   இவ்வருட விழா இனிது நிறைவுறவுள்ளது.

ஆலய கௌரவ தலைவர் சு.தில்லைநாயகம் தலைமையில் நடைபெறும் மகோற்சவப் பெருவிழாவின் கிரியைகள் யாவும் வித்யாசாகரர் சிவாச்சாரிய கலாபவனமணி வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ புண்ய கிருஸ்ணகுமார சிவாச்சாரியார்; தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.

இதேநேரம் வருகைதந்த அடியவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் பணி அடியவர் ஒருவரின் நிதி ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டதுடன் அன்னதானப் பணியை ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.