கரடியனாறு மகாவித்தியலத்தில் உணவு ஒவ்வாமையினால் 31 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்




 

(வைப்பகப் படம்)

(கனகராசா சரவணன்) 

மட்டு கரடியனாறு மகாவித்தியலத்தில்  உணவு ஒவ்வாமையினால் 31 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி 




(கனகராசா சரவணன்) 



மட்டக்களப்பு கரடியனாறு மகாவித்தியாலத்தில் சிற்றுண்டிச்சாலையில் நூடில்ஸ்  வாங்கி சாப்பிட்ட மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தியெடுத்து 31 மாணவர்கள் கரடியனாறு வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (11) பகல் அதுமதிக்கப்பட்ட நிலையில் 27 பேர் மேலதிக சிகிச்சைக்கா மட்டு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதையடுத்து அந்த பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் சிற்றுண்டிசாலையை நடாத்திவந்த அதன் உரிமையாளரான பெண் சரணடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



குறித்த பாடசாலையில் உள்ள சிற்றுண்;டிச்சாலையில் சம்பவதினமான இன்று காலை இடைவேளை நேரத்தில் சிற்றுண்டிச்சாலையில் இடியப்பம், புட்டு, இட்டலி, நூடில்ஸ் ஆகிய உணவுகளை மாணவர்கள் வாங்கி சாப்பிட்டுள்ளனர் இந்த நிலையில் பகல் ஒரு மணியளவில் சிற்றுண்டிசாலையில் உணவு வாங்கி சாப்பிட்ட  பல மாணவர்கள்   வாந்தியெடுக்க தொடங்கியதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது



இதனையடுத்து வாந்தியெடுத்த மற்றும் மாணவர்களை கரடியனாறு வைத்தியசாலையில் தரம் 6 தொடக்கம் 10 ஆண்டுவரையிலான ஆண் பெண்கள் உட்பட 31 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கபட்ட நிலையில் பல மாணவர்களுக்கு மயக்க நிலை ஏற்பட்டதுடன் தொடர்ந்து வாந்தியெடுத்ததையடுத்து 27 மாணவர்களை அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக  மூன்று அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்



இந்த சம்பவத்தையடுத்து அங்கு சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனையின் போது பழுதடைந்த நூடில்ஸ் விற்;கப்பட்டதாக தெரியவந்துள்ளது இதனையடுத்து அந்த பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சிற்றுண்டிச்சாலை நடாத்திவந்த பெண் உரிமையாளர் பெரிசாரிடம் சென்று சரணடைந்துள்ளதையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.



இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்