அக்கரைப்ப்பற்று ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினால் கொள்வனவு செய்யப்பட்ட காணிக்கான உரித்துப் பத்திரமானது 2025.3.14 ந் திகதியன்று அக்கரைப்பற்று பிரதேச செயலரிடம் கையளிக்கப்படது.
அக்கரைப்ப்பற்று ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் அயாரத உழைப்பின் காரணமாக, சில நன்கொடையாளார்களும் பரோபகாரிகளும் இதற்கான நிதியினை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவிற்கு வழங்கியிருந்தனர்.
குறித்த வைத்தியசாலையில், பணிபுரியும் நிபுணர்கள் தங்கி பணிபுரிவதற்கான வதிவிட வசதிகள் இங்கு குறைவாகக் காணப்படுவதனை உணர்ந்த வைத்தியசாலை அபிவிருத்திக் குழு, வைத்தியசாலைக்கு மிக அண்மையில் உள்ள இக் காணியுடன்கூடிய வீட்டுத் தொகுதிகளை கொள்வனவு செய்வதற்கு அரும்பணியாற்றியிருந்தது.
குறிப்பிட்ட இந்த நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்தி குழு அங்கத்தவர்கள் கலந்து கொடுத்த காணிக்கான பத்திரத்தினை அக்கரைப்பற்று பிரதேச செயலாளரிடம் கையளித்தார்கள். குறித்த காணியில் வைத்தியசாலைக்கு அருகில் காணப்படுவதுடன், அதில் லைத்திய நிபுணர்கள் தங்குவதற்கு ஏற்றாற்போல் வீட்டு விடுதிகளும் காணப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
Post a Comment
Post a Comment