பாறுக் ஷிஹான்
நீண்ட காலமாக டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களாக பணியாற்றிய 640 பேருக்கு சுகாதார அமைச்சு நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளது. அந்த வகையில் சுகாதார சேவை உதவியாளர் (கள டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்) நியமனத்தினைப் பெற்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு இணைப்புச் செய்யப்பட்ட 26 பேரும் தங்களது கடமையினைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
குறித்த ஊழியர்களுக்கான Orientation Programme திங்கட்கிழமை (09) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. நிருவாகப் பிரிவினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்கள் உட்பட பிராந்திய பிரிவுத்தலைவர்கள், நிருவாக உத்தியோகத்தர் திருமதி எம் எஸ் வாஜிதா, , பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ரீ.எம.இனஷாப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
%20(1).jpg)

Post a Comment
Post a Comment