கசிப்புடன் கைதானவரிடம் விசாரணை



 


பாறுக் ஷிஹான்


35 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் கைதான 24 வயது சந்தேக நபரான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  வீரமுனை  பகுதியில் உள்ள வீடொன்றில்  கசிப்புடன்  கடந்த ஞாயிற்றுக்கிழமை(8) அன்று 24  வயதுடைய சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் ஆலோசனைக்கமைய   மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸார்  சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த  35 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடன் குறித்த சந்தேக நபரை  கைது செய்திருந்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட   சந்தேக நபர் மீட்கப்பட்ட கசிப்பு உள்ளிட்ட   சான்றுப்பொருட்கள்   சட்டநடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்க எடுத்துச் செல்லப்பட்டு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்