சாதனையாளர் பாராட்டு விழா





பாறுக் ஷிஹான்


நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேசன் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த சாதனையாளர்  கெளரவிப்பு நிகழ்வு   செவ்வாய்க்கிழமை (10) சவளக்கடை றோயல் கார்டனில் நடைபெற்றது.

அல்-கரீம் பவுண்டேசன் பணிப்பாளர் சட்டத்தரணி சி.எம்.ஹலீம் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறப்பினருமான அஷ்ரப் தாஹிர்   பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.  அத்துடன் இந்நிகழ்வில் உயர் அதிகாரிகள் மற்றும் கல்விமான்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மேலம் இதன் போது  கல்முனை மாநகர சபை நிதி உதவியாளராக பணியாற்றும் யூ.எம். இஸ்ஹாக் மற்றும்  கல்முனை பிரதேச செயலக நிதி உதவியாளராக பணியாற்றும்  ஏ.எஸ்.முஜாஹித்   கெளரவம் வழங்கப்பட்டது.இதில் கல்வி ரீதியில் சமூகத்தில் முன்னேற்றம் கண்ட மாணவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவரும்  முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான அப்துல் றஷாக் ஜவாத்  அல்- கரீம் பெளண்டேஷன் அமைப்பின் தவிசாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சி.எம்.  முபீத்  ஓய்வு பெற்ற வலய கல்வி பணிப்பாளர் அப்துல் ஜெலீல்  பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா உள்ளிட்ட ஊரின் முக்கியஸ்த்தர்கள்  அதிபர்கள்  ஆசிரியர்கள்இ பொது மக்களெனப் பலரும் கலந்து கொண்டனர்.


இந்த அமைப்பு பல்வேறு சமூக செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த 15 வருடங்களாக சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வுகளையும் முன்னெடுத்து வருகின்றது.