ஹபரணை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து.!!
ஏறாவூர் அம்பியுலன்ஸ் விபத்து - நகர சபை உறுப்பினர், சாரதி உட்பட நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி.
இன்று 25 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏறாவூரிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த பலநோக்கு கூட்டுறவு வைத்தியசாலைக்கு சொந்த அம்பியுலன்ஸ் வண்டி தம்புள்ள, ஹபரணையில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் ஏறாவூர் நகர சபை உறுப்பினர் அல்ஹாபிழ் உவைஸ், ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சக்கூர், அவரது மனைவி, அம்பியுலன்ஸ் சாரதி அஸீம் ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#habarana #accident #NewsUpdate


Post a Comment
Post a Comment