Showing posts with label Article. Show all posts

 கடந்த 1979-ஆம் ஆண்டு புரட்சி, இரானின் ஆட்சியாளர்களை அதிகாரத்திற்குக் கொண்டு வந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அவர்கள் இப்போது தங்களுடைய மிக மோசமான தருணத்தை எதிர்கொள்கின்றனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதல்களில் அதிஉயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி மற்றும் பிற உயர்மட்ட ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். மேலும் முக்கிய உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுமே ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகச் சமிக்ஞை அளித்துள்ளன. மேலும் இரானியர்கள் தங்கள் அரசாங்கத்தைத் தூக்கியெறியுமாறு வலியுறுத்துகின்றன.

ஆயினும், இரானின் ஆட்சியானது நீடித்திருக்கக்கூடிய மற்றும் எளிதில் வீழ்த்தப்பட முடியாத ஓர் அதிகாரக் கட்டமைப்பைத் திட்டமிட்டு உருவாக்கியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் அதன் வலிமைக்கு என்ன காரணம்? மத்திய கிழக்கின் பிற நாடுகளில் இருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது?

புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமனெயி 

பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images

படக்குறிப்பு,மொஜ்தபா காமனெயி, தனது தந்தையின் கடுமையான ஆட்சியைத் தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'அழிக்க முடியாத அமைப்பு '

இரானின் முடியாட்சியை வீழ்த்தியதில் இருந்து, இஸ்லாமியக் குடியரசு அதிர்ச்சிகளைத் தாங்கி நீடித்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஓர் அரசியல் அமைப்பைப் படிப்படியாகக் கட்டியெழுப்பியுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், கருத்தியல் போதனைகள், தலைமைகளின் ஒற்றுமை மற்றும் சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஆகியவை இதற்கு காரணமாகும்.

"இது அழிக்க முடியாத அமைப்பு. நீங்கள் ஒரு தலையை வெட்டினால் புதிய தலைகள் மீண்டும் வளரும்," என்கிறார் பெல்ஜியத்தில் உள்ள ஐரோப்பிய உலக அரசியல் நிறுவனத்தின் மத்திய கிழக்கு ஆய்வாளர் செபாஸ்டியன் பூசோயிஸ்.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவங்களுக்கு சவால் தர இரான் பயன்படுத்தும் 'வியூகம்'

டெத் பாட், ஏஐ, மரணம்

இறந்தவர்களுடன் 'பேச' உதவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

இந்தியா - இரான், மத்திய கிழக்கு, காஷ்மீர் பிரச்னை, அமெரிக்கா

இந்தியா - பாகிஸ்தான் போர்களில் இரான் யாரை ஆதரித்தது? இரு நாட்டு உறவு பற்றிய ஒரு பார்வை

End of அதிகம் படிக்கப்பட்டது

ஞாயிற்றுக்கிழமையன்று, அலி காமனெயியின் மகன் மொஜ்தபா காமனெயி, அவரது தந்தை கொல்லப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் இரான் அதிஉயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் தனது தந்தையின் தீவிரமான மற்றும் கடுமையான ஆட்சியைத் தொடருவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று, அலி காமனெயியின் மகன் மொஜ்தபா காமனெயி, அவரது தந்தை கொல்லப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் அவருக்குப் பின் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பட மூலாதாரம்,Majid Asgaripour/WANA (West Asia News Agency) via REUTERS

'பன்முனை சர்வாதிகாரம்'

துனிசியா, எகிப்து மற்றும் சிரியா போன்ற பிற நாடுகளில் தலைவர்கள் தூக்கியெறியப்பட்டதைப் போலல்லாமல், இரான் அதன் கருத்தியல் ரீதியிலான பாதுகாப்பு கட்டமைப்பின் காரணமாக அழுத்தங்களை சிறப்பாக எதிர்கொள்ள முடிந்தது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இரான் ஒரு தனி நபரை மையமாகக் கொண்ட ஒரு பொதுவான சர்வாதிகாரத்தின் கீழ் இயங்குவதற்குப் பதிலாக, ஒரு 'பன்முனை சர்வாதிகாரத்தைக்' கொண்டுள்ளது.

இது ''அரசியல் இஸ்லாத்தின் ஆதரவாளர்களுக்கும் தீவிர இரானிய தேசியவாதத்திற்கும் இடையிலான ஒரு கூட்டணி" என்கிறார் டெஹ்ரானை சேர்ந்த இரானுக்கான பிரெஞ்சு ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பெர்னார்ட் ஹூர்கேட்.

மதகுருமார்களின் அமைப்புகள், ஆயுதப் படைகள் மற்றும் முக்கிய பொருளாதார அமைப்புகள் எனப் பல மையங்களில் அதிகாரம் பரவிக் கிடக்கிறது.

ஒற்றைத் தலைமை கொண்ட சர்வாதிகாரத்தை விட இந்த அமைப்பை வீழ்த்துவதை இது மிகவும் கடினமாக்குகிறது.

சட்டங்களை நிராகரிக்கும் அதிகாரம், தேர்தலுக்கான வேட்பாளர்களை ஆய்வு செய்ய அதிகாரம் கொண்ட பாதுகாவலர்கள் சபை போன்ற பிற அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளது.

இது, எந்தவொரு தனிப் பிரிவினரும் அரசுக்கு ஒரு தீவிர சவாலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

இரான் எதேச்சதிகார ஆட்சி முறை கொண்ட நாடாக பரவலாகக் கருதப்பட்டாலும், அது இரானியர்களுக்கு அதிபர் தேர்வு உள்ளிட்ட சில தேர்தல்களில் வாக்களிப்பதற்கான அடையாளப்பூர்வ வாய்ப்பை வழங்குகிறது.

இருப்பினும், இந்த செயல்முறை மிகவும் இறுக்கமாக நிர்வகிக்கப்படுகிறது. இஸ்லாமியக் குடியரசின் மீதான அர்ப்பணிப்பு உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் பாதுகாவலர்கள் சபையால் வேட்பாளர்கள் ஆய்வு செய்யப்படுகிறார்கள்.

இரானின் ராணுவத்திற்குள் ஒரு மேலாதிக்க சக்தியாக விளங்கும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை 

பட மூலாதாரம்,NurPhoto via Getty Images

புரட்சிகர காவல்படையின் மையப் பங்கு

அரசு நிறுவனங்கள் இந்த ஆட்சிமுறையின் அடிப்படை அமைப்புகளாகச் செயல்படுகின்றன என்றால், பாதுகாப்புப் படைகள் அதன் வலிமையாகக் கருதப்படுகின்றன.

வழக்கமான ராணுவத்துடன் இணைந்து செயல்படும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, பெரும்பாலும் "ஆட்சியின் முதுகெலும்பாக" கருதப்படுகிறது என்று ஹூர்கேட் கூறுகிறார்.

தனது ராணுவப் பங்கிற்கு அப்பாற்பட்டு, இது ஒரு அரசியல் மற்றும் பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது.

முக்கியமாக, தொடர்ச்சியான அமைதியற்ற சூழ்நிலைகளின் போதும் பாதுகாப்புப் படைகள் ஒற்றுமையாகவே இருந்துள்ளன. இந்த விசுவாசத்தை கருத்தியலுடன் பூசோயிஸ் தொடர்புபடுத்துகிறார்.

"ஷியாக்கள் [இஸ்லாத்தின் இரண்டு முக்கிய பிரிவுகளில் ஒன்றைப் பின்பற்றுபவர்கள்] மற்றும் ஹமாஸ், ஹெஸ்பொலா போன்ற குழுக்களிடையே காணும் இந்த தியாக கலாசாரம், வாழ்வின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது," என்று அவர் கூறுகிறார்.

தொடர்ச்சியையும் உறுதி செய்வதற்காக ஒவ்வொரு இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளபதிக்கும் அடுத்து வரக்கூடிய மாற்று தளபதிகள் தயாராக இருப்பதாக இரானின் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ரெசா தலையினிக் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.

இரானின் பரவலாக்கப்பட்ட இந்த கட்டமைப்பு, 2003-இல் அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகளின் படையெடுப்பின்போது இராக் படைகள் சரிந்ததிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களால் உருவானது என்று 'அணுசக்தி இரானுக்கு எதிராக ஒன்றுகூடல்' அமைப்பின் காவல்படை ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் கஸ்ரா ஆராபி கூறுகிறார்.

மேலும், இந்த ஆட்சி நீடித்தால், "காவல்படையினர் இன்னும் முக்கியமான பங்கைக் கொண்டிருப்பார்கள்." என்று அவர் கருதுகிறார்.

1979-ஆம் ஆண்டு புரட்சி, இரானின் ஆட்சியாளர்களை அதிகாரத்திற்குக் கொண்டு வந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அவர்கள் இப்போது தங்களின் மிக மோசமான தருணத்தை எதிர்கொள்கின்றனர்.

பட மூலாதாரம்,Morteza Nikoubazl/NurPhoto via Getty Images

படக்குறிப்பு,இரானின் அதிகாரக் கட்டமைப்பு, அந்த ஆட்சிமுறை தொடர்ச்சியான பல அதிர்ச்சிகளைத் தாங்கி நிற்பதற்கு வழிவகுத்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆதரவு வலையமைப்புகள் மற்றும் உயரடுக்கு ஒற்றுமை

இரான் பொருளாதாரத்தின் பெரும்பகுதிகள் 'போனியாட்ஸ்' போன்ற அரசுடன் தொடர்புடைய அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இவை பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான நிறுவனங்களைச் சொந்தமாகக் கொண்ட அறக்கட்டளைகளாக உருவெடுத்துள்ளன.

இந்த வலைப்பின்னல்கள் ஆட்சிக்கு விசுவாசமாக இருக்கும் பிரிவினருக்கு வேலைகளையும் ஒப்பந்தங்களையும் வழங்குகின்றன.

காதம் அல்-அன்பியா கூட்டு நிறுவனம் உள்ளிட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் வணிக சாம்ராஜ்யம், இந்த வணிக "ஆதரவு" முறையை வலுப்படுத்துகிறது.

மேற்கத்திய நாடுகளின் தடைகள் இரானின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ள போதிலும், இந்த வலைப்பின்னல்கள் முக்கிய உயரடுக்கினரைப் பாதுகாக்கவும், இந்த ஆட்சிமுறை நீடிப்பதில் அவர்களுக்குள்ள பங்கினை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த அமைப்பு "மிகவும் உறுதியானது, இதில் பிளவுகள் ஏற்பட்டு வெளியேறுபவர்களை நாம் காண்பதே இல்லை," என்று பூசோயிஸ் கூறுகிறார்.

சித்தாந்தமும் புரட்சியின் மரபும்

அதிகாரத்தைத் தக்கவைப்பதில் மதமும் ஒரு வலிமையான பங்கினை வகிக்கிறது.

இரான் புரட்சியானது மத, அரசியல் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒரு நிலையான வலைப்பின்னலை உருவாக்கியது. இது இன்றும் அரசின் உலகளாவிய பார்வையை வடிவமைத்து வருகின்றது.

"கருத்தியல், அதிகாரத்துவ மற்றும் நிர்வாக ரீதியான இந்த மிகப்பழமையான, மிகவும் சக்திவாய்ந்த கட்டமைப்பு இந்த அமைப்பை வலுவாக்குகிறது," என்று கூறும் பூசோயிஸ், இந்தக் கருத்தியலானது "ஒற்றுமை, தொழில்முறை அர்ப்பணிப்பு மற்றும் ஆள்சேர்ப்புக்கான உண்மையான ஆதாரமாகச் செயல்படுகிறது," என்றும் குறிப்பிடுகிறார்.

இரானியர்கள் அதிபரைத் தேர்ந்தெடுப்பது உட்பட சில தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். 

பட மூலாதாரம்,KHOSHIRAN/Middle East Images/AFP via Getty Images

பிளவுபட்ட எதிர்க்கட்சி

வரலாற்று ரீதியாக, இரானின் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு காணப்படுகின்றன.

அவற்றில் சீர்திருத்தவாதிகள், முடியாட்சி ஆதரவாளர்கள், இடதுசாரி குழுக்கள், இரானின் தேசிய எதிர்ப்பு கவுன்சில் போன்ற புலம்பெயர்ந்தோர் இயக்கங்கள் மற்றும் பல்வேறு இன அமைப்புகள் அடங்கும்.

இந்த பிளவு நீண்டகாலமாக நிலவி வருவதாக பிரிட்டனைச் சேர்ந்த ஐரோப்பிய வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் என்ற சிந்தனைக் குழுவின் மூத்த கொள்கை ஆய்வாளர் எல்லி கெரன்மயே கூறுகிறார்.

புரட்சிக்குப் பிறகு, அரசியல் கட்சிகளை உருவாக்குவது குறித்த விவாதம் ஓரங்கட்டப்பட்டது என்றும் 1980-இல் துவங்கி எட்டு ஆண்டுகள் நீடித்த இராக் உடனான போர் ஒரு காரணமாக கூறப்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.

பல்வேறு காலகட்டங்களில் மிதவாத பிரிவினர் ஆட்சி அதிகாரத்தாலும் கடும்போக்காளர்களாலும் "ஒதுக்கப்பட்டனர், இழிவுபடுத்தப்பட்டனர் அல்லது சிறையில் அடைக்கப்பட்டனர்," என்று கெரன்மயே விளக்குகிறார்.

கடந்த காலங்களில் 2009-ஆம் ஆண்டின் கிரீன் மூவ்மெண்ட் மற்றும் 2022-இல் மஹ்சா அமினியின் மரணத்தால் வெடித்த போராட்டங்கள் என ஆட்சிக்கு எதிராகப் பெரிய அளவிலான போராட்ட இயக்கங்கள் தோன்றின.

ஆனால் அந்தப் போராட்டங்களுக்கு ஒரு மையத் தலைமை இல்லை, மேலும் அவை அரசின் கடுமையான ஒடுக்குமுறையை எதிர்கொண்டன.

இருப்பினும், இந்த ஆண்டு இறுதியில் துவங்கிய சமீபத்திய போராட்ட அலைகள், மறைந்த ஷா மன்னரின் வெளிநாட்டில் வாழும் மகனின் "உலகளாவிய செயல்பாட்டு தினத்திற்கான" அழைப்பைத் தொடர்ந்து நிகழ்ந்தன.

இரான் இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. தொடர்ந்து இணைய முடக்கம் செய்தல், செயற்கை நுண்ணறிவு மூலம் கண்காணித்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள செயல்பாட்டாளர்களைக் குறிவைக்கும் இணையப் பிரிவுகள் ஆகியவற்றையும் அது இயக்குகிறது.

இரானை எளிதாக வீழ்த்த முடியாதது ஏன்? பட மூலாதாரம்,Getty Images

எச்சரிக்கை என்ன?

ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் அமெரிக்கத் தலைமையிலான தலையீடுகளின் விளைவுகளைக் கண்ட பிறகு, பல ஆண்டுகளாக பல இரானியர்கள் ஆட்சி மாற்றத்திற்காக அழுத்தம் கொடுக்கத் தயங்கினர் என்று கெரன்மயே கூறுகிறார்.

மேலும், அரபு எழுச்சிகளின் பின்விளைவுகள் இந்த எச்சரிக்கை உணர்வை மேலும் ஆழப்படுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.

ஆனால், வேலை வாய்ப்பு முதல் சுத்தமான குடிநீர் வரை அடிப்படைத் தேவைகளைக் கூட அரசால் இனி வழங்க முடியாது என்றும், அதே சமயம் எதிர்ப்பை ஒடுக்க மிருகத்தனமான சக்தியைப் பயன்படுத்துவதாகவும் பல இரானியர்கள் கருதுவதால், இப்போது இந்த கணக்கீடு மாறியுள்ளதாக அவர் கூறுகிறார்.

புதியதாக உருவான போராட்ட அலைக்கு எதிராக ஜனவரியில் நடைபெற்ற கடுமையான அடக்குமுறையும், நாட்டில் இதுவரை காணப்பட்ட மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக இருந்த அந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதும், இந்த மாற்றத்தை மேலும் வேகப்படுத்தியது என்று அவர் கூறுகிறார்.

உயர் கல்வி கற்றவர்கள், உலகளாவிய தொடர்புகளைக் கொண்டவர்கள் மற்றும் சமூக ஊடகங்களால் ஈர்க்கப்பட்ட இளைய தலைமுறை இரானியர்கள், இந்த ஆட்சிமுறையை "ஊழல் நிறைந்தது, ஒடுக்குமுறையானது மற்றும் தங்கள் கனவுகளுக்கு தொடர்பற்றது" என்று கருதி நிராகரிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிடுகிறார்.

இரானியர்களுக்கும் ஆட்சிமுறை குறித்த அவர்களின் அணுகுமுறைக்கும் இடையே ஒரு "தலைமுறை இடைவெளி" இருப்பதாக ஹூர்கேட் கூறுகிறார்.

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் இரானின் முக்கிய உள்கட்டமைப்பு தளங்களைக் குறிவைத்துள்ளன.

'ஒவ்வொரு ஆட்சியும் இறுதியில் முடிவடைகிறது'

மக்கள் திரள் போராட்டம், ஆளும் உயரடுக்கினரிடையே பிளவு மற்றும் பாதுகாப்புப் படைகளின் விலகல் ஆகிய மூன்று நிலைகளும் ஒன்றிணையும் போதுதான் சர்வாதிகார ஆட்சிகள் வீழ்ச்சியடையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த காலங்களில், இரான் பெரும்பாலும் முதல் நிலையை அனுபவித்துள்ளது, ஆனால் மற்ற இரண்டையும் சந்திக்கவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இஸ்லாமியக் குடியரசின் முடிவு தவிர்க்க முடியாதது, ஆனால் அது உடனடியானது அல்ல என்று ஹூர்கேட் கருதுகிறார்.

"ஒவ்வொரு ஆட்சிமுறையும் இறுதியில் முடிவுக்கு வரும். உண்மையான கேள்வி அதன் காலம்தான்." என்று கூறும் அவர், காமனெயியின் மரணம் இந்த ஆட்சிமுறைக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்று குறிப்பிடுகிறார்.

"அவரைப் போன்ற ஒருவர் இனி இருக்க மாட்டார். அவருக்குப் பின் வருபவருக்கு காமனெயிக்கு இருந்த அதிகாரம் ஒருபோதும் இருக்காது" என்கிறார்.

ஆனால் இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சி என்பது உறுதிப்படுத்த முடியாத ஒன்று என பூசோயிஸ் கூறுகிறார்.

ஒருவேளை அது நிகழ்ந்து, அதற்கு வெளிநாட்டு ராணுவத் தலையீடு காரணமாக இருந்தால், அதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கலாம் என்று அவர் விளக்குகிறார்.

முன்னாள் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறைபிடித்தது போன்ற ஒரு "சரியான சூழலே" இரானுக்கும் அமையும் என்று டிரம்ப் முன்பு நியூயார்க் டைம்ஸிடம் கூறியிருந்தார்.

ஆனால், இதற்கு நேர்மாறாக "வடகொரியா அல்லது கியூபாவில் இருப்பது போல ஆட்சி மேலும் வலுவடையலாம்.'' என்கிறார் பூசோயிஸ்.

 ஒரு வாரமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானில் உள்ள இலக்குகளைத் தாக்கி, வான்வழியாகப் போரை நடத்தி வருகின்றன. விரைவில் தரைப்படை இறக்கப்படுமா? இருக்கலாம். ஆனால் அவை அமெரிக்கப் படைகளாக இருக்காது.

வடக்கு இராக்கில் புலம்பெயர்ந்து வாழும் இரானிய குர்திஷ் எதிர்ப்புக் குழுக்கள், எல்லையைத் தாண்டிச் செல்லும் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளன.

இந்தத் திட்டங்கள் பல ஆண்டுகாலமாகவே அவர்களிடம் உள்ளன.

ஆனால் தங்கள் போராளிகள் ஏற்கனவே எல்லை தாண்டிவிட்டதாகக் கூறப்படும் தகவல்களை அவர்கள் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.

"இஸ்லாமிய குடியரசு உருவான காலம் முதல், கடந்த 47 ஆண்டுகளாக இதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம்," என்று குர்திஸ்தான் சுதந்திரக் கட்சியின் ஹனா யஸ்தான்பனா கூறினார்.

இந்தக் கட்சி தங்களிடம்தான் மிகப்பெரிய ஆயுதப் படை இருப்பதாகக் கூறுகிறது.

ஆனால், "ஒரு பெஷ்மெர்கா கூட இன்னும் நகரவில்லை" என்று அவர் கூறினார். 'பெஷ்மெர்கா'என்ற குர்திஷ் சொல்லுக்கு "மரணத்தை எதிர்கொள்பவர்கள்" என்று பொருள்.

ஆறு எதிர்ப்பு குழு

சமீபத்தில் ஒரு கூட்டணியை உருவாக்கிய ஆறு எதிர்ப்பு குழுக்களும் அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயல்படுவதாக யஸ்தான்பனா கூறினார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

அமெரிக்க ராணுவ தலையீடு, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா

இராக், லிபியா, ஆப்கன் உள்பட அமெரிக்க ராணுவம் தலையிட்ட 5 நாடுகளில் என்ன நடந்தது?

டி20 உலகக் கோப்பை, இந்தியா - நியூசிலாந்து, சஞ்சு சாம்சன்

டி20 உலகக்கோப்பை யாருக்கு? நியூசிலாந்தின் மிகப்பெரிய பலமும் இந்தியாவின் ஒரே பலவீனமும்

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய்

ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவையா?

அட்டைகள் நம் ரத்தத்தை குடிக்கும்போது வலியே தெரியாதது ஏன்?

வலியே தெரியாமல் ரத்தம் உறிஞ்சும் 'அட்டைகள்' - நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

End of அதிகம் படிக்கப்பட்டது

"யாரும் தனியாக நகர மாட்டார்கள். எங்கள் சகோதரர்கள் நகரப் போகிறார்கள் என்றால் அது எங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறினார்.

இந்த வாரம் போராளிகள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. முதலில், அமெரிக்கா அதற்கான வழியை வகுக்க வேண்டும்.

"வான் தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால் எங்களால் நகர முடியாது. மேலும் இரான் ஆட்சியின் ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட வேண்டும். இல்லையெனில், அது தற்கொலைக்கு சமமானது. இந்த ஆட்சி மிகவும் கொடூரமானது, எங்களிடம் உள்ள மிகவும் மேம்பட்ட ஆயுதம் கலாஷ்னிகோவ் மட்டுமே" என்று குறிப்பிட்டார்.

குர்திஷ் போராளிகளைப் பாதுகாக்க அமெரிக்கா 'விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலத்தை உருவாக்க வேண்டும்' என்று அவர் விரும்புகிறார்.

"நாங்கள் இதை பலமுறை கேட்டுள்ளோம். 'இது எங்களுக்கு அவசரமாகத் தேவை' என்று மின்னஞ்சல் அனுப்பியவர் நான்தான்" என்று அவர் கூறினார்.

இராக்கில் இஸ்லாமிய அரசு குழுவிற்கு எதிராகப் போரிட கடந்த காலத்தில் அமெரிக்கப் படைகளால் பயிற்சி அளிக்கப்பட்ட குர்துகளுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆயுதம் வழங்கப் பரிசீலித்து வருவதாக வெளியான செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

ஆனால் இரானிய குர்திஷ் படைகளின் சாத்தியமான முன்னேற்றம் குறித்த விவாதம் அதிகரித்து வரும் நிலையில், அவர்கள் மீதான இரானின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

இரண்டு வெவ்வேறு குழுக்கள் மீதான தாக்குதல்களின் பின்விளைவுகளை நாங்கள் கண்டோம், இதில் குர்திஸ்தான் சுதந்திரக் கட்சியின் தளம் ஒன்றைத் தாக்கிய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் ஒரு போராளி கொல்லப்பட்டார்.

இராக்கில் இஸ்லாமிய அரசு குழுவிற்கு எதிராகப் போரிட கடந்த காலத்தில் அமெரிக்கப் படைகளால் பயிற்சி அளிக்கப்பட்ட குர்துகளுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆயுதம் வழங்கப் பரிசீலித்து வருவதாக வெளியான செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

பட மூலாதாரம்,Matthew Goddard/BBC

படக்குறிப்பு,வடக்கு இராக்கில் உள்ள இரானிய குர்திஷ் குழுக்களின் தளங்கள் மீது இரான் ஏவுகணைகளை வீசியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

குர்து மக்கள் யார்?

சில குழுக்கள் தங்கள் தளங்களை காலி செய்துவிட்டு, தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள தங்கள் படைகளை இடமாற்றம் செய்துள்ளன.

இரான் ஆட்சிக்கு எதிரான போரில் இணைவது ஒரு மிகப்பெரிய அபாயமாகும், மேலும் இதற்குப் பதிலாக டிரம்ப் எதை வழங்கக்கூடும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

மத்திய கிழக்கின் நான்காவது பெரிய இனக்குழுவான குர்து மக்கள், இரான், இராக், சிரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் சிதறி வாழ்கின்றனர்.

அவர்கள் துன்புறுத்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர்.

"மலைகளை தவிர நமக்கு நண்பர்கள் யாரும் இல்லை" என்பது குர்துகளின் பழமொழி.

அமெரிக்கா தனது வாக்குறுதிகளை காப்பாற்றும் என்று நம்ப முடியுமா?

சிரியாவில் உள்ள பல குர்துகள் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) அமைப்பிற்கு எதிரான போரில் அமெரிக்காவின் உறுதியான கூட்டாளிகளாக இருந்தவர்கள்.

சமீபத்தில் தங்களை விடுத்து சிரியாவில் இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவாக டிரம்ப் செயல்பட்டபோது அவர்கள் கோபமடைந்தனர்.

ஆனால் சில மூத்த இரானிய குர்திஷ் தலைவர்கள் நடைமுறை ரீதியான பார்வையை கொண்டுள்ளனர்.

கேடிபிஐயின் முஸ்தபா மௌலுடி 

பட மூலாதாரம்,Matthew Goddard/BBC

படக்குறிப்பு,முஸ்தபா மௌலூதி

நம்பிக்கை என்ன?

"அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்த போரை எங்களது நம்பிக்கைகளுக்காக தொடங்கவில்லை, மாறாகத் தங்களுடைய சொந்த நலன்களுக்காகவே தொடங்கின" என்கிறார் இரானின் குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் முஸ்தபா மௌலூதி.

"ஆனால் அவர்கள் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தளங்களைக் குறிவைக்கிறார்கள், இது எங்களுக்குச் சாதகமாக அமையும் என்பதோடு நாங்கள் உள்ளே நுழையவும் உதவும் " என்று குறிப்பிட்டார்.

67 வயதான அவர், தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இந்த இஸ்லாமிய ஆட்சியின் வீழ்ச்சிக்காகக் காத்திருப்பதிலேயே கழித்துள்ளார்.

பாரம்பரிய குர்திஷ் உடையணிந்த அவர், தனது குடும்பத்தின் வேதனையான வரலாற்றை விவரித்தார்.

இவரது ஒரு உறவினர் 13 வயதில் இந்த இரான் ஆட்சியால் கொல்லப்பட்டார், மற்றொருவர் எதிர் தரப்புடன் ஒத்துழைத்ததாகக் கூறி 31 ஆண்டுகளாக இன்னும் சிறையில் இருக்கிறார்.

இவரது அரசியல் நடவடிக்கைகள் காரணமாக தனது குடும்பத்தில் 60 சதவீதத்தினர் கைது செய்யப்பட்டு, மோசமாக நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

மௌலூதி தனது தாய் மண்ணுக்குத் திரும்பும் முதல் தருணங்களை ஏற்கனவே மனக்கண்ணில் வைத்துள்ளார்.

"நான் கிராமத்தை அடையும்போது, 'உங்களுக்காகவே நான் போராடினேன், நீங்கள் எனது மக்கள், இப்போது நான் இன்னும் அதிகமாகப் போராடுவேன்' என நான் உரத்த குரலில் சொல்வேன்" என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

மார்ச் 21அன்று வரும் குர்திஷ் புத்தாண்டு பண்டிகையான நோரூஸை கொண்டாடுவதற்குள் தான் அங்கு இருப்பேன் என்று அவர் நம்புகிறார்.

இரானின் 90 மில்லியன் மக்கள் தொகையில் குர்துகள் சுமார் 10 சதவீதம் உள்ளனர். இங்குள்ள அவர்களின் தலைவர்கள், டிரம்புக்கும் தங்களுக்கும் ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

"நாங்கள் இரானில் அரசியல் ரீதியாக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு. மாற்றத்திற்கான இந்த வாய்ப்பை நாங்கள் வீணடிக்க விடமாட்டோம்" என்று இரானிய குர்திஸ்தான் கோமலா கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல்லா மொஹ்தாடி கூறினார்.

இரானின் 90 மில்லியன் மக்கள் தொகையில் குர்துகள் சுமார் 10 சதவீதம் உள்ளனர். இங்குள்ள அவர்களின் தலைவர்கள், டிரம்புக்கும் தங்களுக்கும் ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பட மூலாதாரம்,Matthew Goddard/BBC

படக்குறிப்பு,குர்திஷ் குழுக்கள் தங்கள் படைகள் சில இரானுக்குள் நுழைந்ததாக வெளியான செய்திகளை மறுத்துள்ளன.

எவ்வளவு துருப்புக்களைத் திரட்ட முடியும்?

குர்துகளால் எத்தனை துருப்புக்களைத் திரட்ட முடியும் என்பதை மதிப்பிடுவது கடினம்.

"ஏற்கனவே உள்ளே இருப்பவர்களையும் சேர்த்து இது சில ஆயிரங்களாக இருக்கலாம்," என்று குர்திஷ் இனத்தைச் சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார்.

"இரானில் ஏற்படும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள், இதன் மூலம் வருங்காலத்திலும் தங்கள் பங்கு இருப்பதை உறுதி செய்ய நினைக்கிறார்கள். வரலாற்றின் பாடங்கள் இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்."

அமெரிக்காவின் வாக்குறுதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இது செயல்படுவதற்கான நேரம் என்று சில இரானிய குர்துகள் கூறுகின்றனர்.

"எங்கள் தாயகத்தைப் பார்க்கும் சிறிய நம்பிக்கை இருந்தாலே போதும்" என்று இரானிய எல்லைக்கு அருகிலுள்ள சுலைமானியா நகரைச் சேர்ந்த ஒரு பெண் கூறினார்.

"நாங்கள் அதை [இரானை] கொலைகாரர்களின் இஸ்லாமிய ஆட்சி என்று அழைக்கிறோம். நாங்கள் அவர்களை அவ்வளவு வெறுக்கிறோம். அவர்கள் பலரைக் கொன்றுள்ளனர்."

இவை அனைத்தும் இராக்கை இக்கட்டான நிலையில் ஆழ்த்தியுள்ளன. அண்டை நாட்டுப் போருக்குள் தாங்களும் இழுக்கப்படுவோமோ என்ற அச்சம் அங்கு நிலவுகிறது.

''பயங்கரவாதச் செயல்களைச் செய்ய, இராக் மண்ணிலிருந்து இரானிய எல்லைக்குள் ஊடுருவவோ அல்லது கடக்கவோ எந்த குழுக்களையும் அனுமதிக்க மாட்டோம்" என்று இராக் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குர்திஷ் படைகள் எல்லையைத் தாண்டினால், அது யஸ்தான்பனாவிற்கு இனிப்பும் கசப்பும் கலந்த தருணமாக இருக்கும்.

"எனது நிலத்திற்குத் திரும்புவது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும்," என்று கூறிய அவர் "எனது தாத்தா பாட்டிகளும் உறவினர்களும் இங்கே [வடக்கு இராக்கில்] இறந்துவிட்டார்கள். நான் மகிழ்ச்சியாக உணர வேண்டுமா அல்லது வருத்தப்பட வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் இந்த நாளைப் பார்க்க உண்மையிலேயே தகுதியானவர்கள் இப்போது இல்லை" என்கிறார்.

 மத்திய கிழக்கில் அமெரிக்கா மீண்டும் ஒரு போரைத் தொடங்கியுள்ளது. அந்தப் பிராந்தியம், நீண்டகாலமாக அமெரிக்காவின் ராணுவ தலையீடுகளை எதிர்கொண்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் தலையீடு எதிர்பார்த்த முடிவைக் கொடுத்ததா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில்.

இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 28 அன்று இரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அந்நாட்டின் அதிஉயர் தலைவர் அலி காமனெயி கொல்லப்பட்டார். இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகவும் கூறும் அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கிய இலக்குகளில் ஒருவராக அவரும் இருந்தார்.

இந்தப் பிராந்தியத்தில் இதற்கு முன்னரும் பல அமெரிக்க அதிபர்கள் தலையிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் டிரம்புக்கு முன்னோடியாக இருப்பவர்கள், அமெரிக்காவின் அதிபராக இருந்த சீனியர் புஷ் மற்றும் ஜூனியர் புஷ், ஒபாமா ஆகியோர். இராக்கில் சதாம் உசேன், லிபியாவில் முஅம்மர் அல் கடாஃபி ஆகியோருக்கு எதிராக ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து அவர்களை வீழ வைத்தது, அந்த நாடுகளுக்கு ஜனநாயகத்தையோ அல்லது சுதந்திரத்தையோ மீட்டுத் தரவில்லை. அதுமட்டுமின்றி, இன்று வரை நீடிக்கும் உள்நாட்டுப் போர் மற்றும் நிலையற்றத் தன்மையையே அது ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் அமைப்பை ஒழிக்க அமெரிக்கா உதவியது. ஆனால் 2024இல் அசத் வீழ்ச்சிக்குப் பிறகு, பிற இஸ்லாமிய குழுக்கள் அங்கு அதிகாரத்தை கைப்பற்றின. ஆப்கானிஸ்தானில் சுமார் இரண்டு தசாப்த அமெரிக்க தலையீட்டிற்குப் பிறகு, 2021இல் தாலிபன் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

ஒபாமா காலத்தில் ராஜ்ஜீய தூதராகவும் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணிபுரிந்த ஃபிலிப் கோர்டன், 2015ஆம் ஆண்டு எழுதிய பிரபலமான ஒரு கட்டுரையில், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தலையீடுகளை பின்வருமாறு சுருக்கமாக விவரிக்கிறார்:

"இராக்கில், அமெரிக்கா தலையிட்டு அந்நாட்டை ஆக்கிரமித்தது; அதன் முடிவு பெரும் இழப்பை ஏற்படுத்திய பேரழிவு. லிபியாவில், அமெரிக்கா தலையிட்டாலும் ஆக்கிரமிக்கவில்லை. இருப்பினும் இந்தத் தலையீடு பெரும் இழப்பை ஏற்படுத்திய ஒரு பேரழிவாகவே இருந்தது. சிரியாவில், அமெரிக்கா தலையிடவும் இல்லை ஆக்கிரமிக்கவும் இல்லை என்றாலும் அதன் முடிவும் பெரும் இழப்பை ஏற்படுத்திய ஒரு பேரழிவே."

இந்த இழப்பு அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிராந்தியத்திற்குமானது என நிபுணர்கள் கருதுகின்றனர். கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணிபுரியும் இப்ராஹிம் அவாத்திடம் பிபிசி பேசியது. அவர், "இந்தப் பிராந்தியத்தின் நிலையற்ற தன்மைக்கு வெளிநாட்டுத் தலையீடுகளே முக்கியக் காரணம்" என்று விளக்குகிறார்.

இராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா அல்லது ஏமன் போன்ற நாடுகள் மோசமான ஆட்சி நிர்வாகம் அல்லது சர்வாதிகார ஆட்சிகளைக் கொண்டிருந்தாலும், இவை "வெளிநாட்டுத் தலையீட்டின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல" என அவாத் கருதுகிறார்.

கடந்த தசாப்தங்களில், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிட்டுள்ளது. சிலவற்றில் பிரதான பங்கு வகித்த வேளையில், சிலவற்றில் கூட்டணியின் ஓர் அங்கமாகவும் அமெரிக்கா செயல்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவற்றை இங்கு பார்ப்போம்.

இராக் (1991 மற்றும் 2003-2011)

கடந்த சில தசாப்தங்களில், இராக்கிற்கு எதிராக அமெரிக்கா பலமுறை ராணுவ ரீதியாகத் தலையிட்டுள்ளது.

கடந்த 1990ஆம் ஆண்டு, சதாம் உசேன் தலைமையிலான இராக், குவைத்தின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றவும், தனது பிராந்திய ஆதிக்கத்தை வலுப்படுத்தவும் அந்த நாட்டின் மீது படையெடுத்தது. அப்போது, அமெரிக்காவின் தலைமையில் ஐநா-வின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட ராணுவ கூட்டணி, 'ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம்' எனப் பெயரிடப்பட்ட போரின் மூலம் தனது மாபெரும் ராணுவ மேலாதிக்கத்தை வெளிப்படுத்தியது.

தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துரிதமான தரைவழித் தலையீடுகள் மூலம், அந்தக் கூட்டணி சில வாரங்களிலேயே குவைத்தை விடுவித்து இராக்கியர்களை வெளியேற்றி வெற்றி பெற்றது. இருப்பினும், சதாம் உசேன் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்த நிலையில், சர்வதேச தடைகளை எதிர்கொண்ட இராக், பிரிவினைவாத மோதல்கள் மற்றும் உள்நாட்டில் நிலையற்ற தன்மையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை மீட்டெடுக்கும் வெற்றிகரமான ஒரு ராணுவ செயல்பாடாகக் கருதப்பட்டது. பெர்லின் சுவர் வீழ்ச்சி மற்றும் பனிப்போரின் முடிவுக்குப் பிறகு நடந்த முதல் போர் என்பதால், இந்த வளைகுடா போர் அமெரிக்க ராணுவ தலையீடுகளின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தது. இது அமெரிக்காவுக்கு நிகர் யாரும் இல்லாத ஒரு 'புதிய உலக ஒழுங்கை' நிலைநாட்டியது.

பின்னர் 2003ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைமையிலான கூட்டணி இராக் மீது படையெடுத்தது. சதாம் உசேன் அரசிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும், பயங்கரவாதத்துடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் கூறி இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது.

ஒரு சில வாரங்களிலேயே அந்தக் கூட்டணி பாக்தாத் நகரைச் சென்றடைந்தது; சதாம் உசேன் கைது செய்யப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டார். ஆனால், தேடப்பட்ட அந்த ஆயுதங்கள் ஒருபோதும் கண்டறியப்படவில்லை.

அதற்குப் பிறகு சன்னி, ஷியா மற்றும் குர்துகளுக்கு இடையிலான மோதல்கள், கிளர்ச்சிகள், தீவிரவாதக் குழுக்களின் எழுச்சி என நாடே நெருக்கடியில் மூழ்கியது. இதன் உச்சகட்டமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உருவானது. இந்த அமைப்பு 2014 மற்றும் 2015க்கு இடைப்பட்ட காலத்தில் இராக்கின் மூன்றில் ஒரு பங்கு நிலப் பரப்பையும், சிரியாவின் பாதி நிலப் பரப்பையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

படையெடுப்பிற்குப் பிறகு என்ன செய்வது என்பது குறித்த முறையான திட்டம் இல்லாததும், இராக் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளைக் கலைத்தது போன்ற மூலோபாய தவறுகள் இராக்கில் ஏற்பட்ட நிலையற்ற நிலைக்கு முக்கியக் காரணங்களாக மாறின. ஆயுதம் ஏந்திய ஆயிரக்கணக்கான வீரர்கள் வேலையிழந்த நிலையில், அவர்களில் பலர் கிளர்ச்சிக் குழுக்களில் இணைந்தனர். இது இன்றும் அந்த நாட்டை உலுக்கி வரும் சீர்குலைவுக்கு வழிவகுத்தது.

கடந்த 2003 முதல் இராக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு வரும் 'இராக் பாடி கவுன்ட்' என்ற திட்டத்தின்படி, கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் நேரடி விளைவாக பொதுமக்கள் மற்றும் போராளிகள் எனக் குறைந்தது 3,00,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என பிற அமைப்புகள் கருதுகின்றன.

அமெரிக்காவின் இந்தத் தலையீடு பற்றிப் பேசிய இப்ராஹிம் அவாத், "இது இராக்கை சமூக ரீதியாகத் துண்டுதுண்டாகச் சிதறடித்தது. இது ஒரு ஜனநாயக, நவீன மற்றும் மதச்சார்பற்ற அரசியல் அமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இதன் விளைவாக ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகள் உருவாவதற்கும் இதுவே காரணமாக அமைந்தது" என்று தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான்

2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் தாலிபன்களால் கைப்பற்றப்பட்டபோது, ​​ஆயிரக்கணக்கான மக்கள் காபூலை விட்டு வெளியேற முயன்றனர்

2001ஆம் ஆண்டு, அமெரிக்கா மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளுடன் இணைந்து, ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு எதிராக 'ஆபரேஷன் என்டியூரிங் ஃப்ரீடம்' என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.

கடந்த 1996இல் அந்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அடிப்படைவாத இஸ்லாமிய இயக்கம், 2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மற்றும் பென்டகன் மீது தாக்குதல் நடத்திய அல்-கொய்தா குழுவின் தலைவர் ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க மறுத்துவிட்டது. இதன் காரணமாகவே ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க அமெரிக்கா முடிவு செய்தது.

இந்தத் தலையீடு சில வாரங்களிலேயே தாலிபன் ஆட்சியை வீழ்த்துவதிலும், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் ஒரு புதிய அரசாங்கத்தை நிறுவுவதிலும் வெற்றி பெற்றது. ஆனால் இது போரை முடிவுக்குக் கொண்டு வரவில்லை.

அமெரிக்காவின் தலையீட்டால் தாலிபன்கள் பின்னடவைச் சந்தித்தாலும், அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போரிட்டதால், இந்த மோதல் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.

2020ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மையான பகுதிகளை தாலிபன்களிடம் இழந்த அமெரிக்கா அந்நாட்டில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கிய அமெரிக்கப் படைகள் வெளியேற்றம், 2021 ஆகஸ்ட் மாதத்தில் தாலிபன்கள் காபூலை கைப்பற்றிய பிறகு துரிதப்படுத்தப்பட்டது.

2003இல் தொடங்கிய இராக் போர், அமெரிக்காவின் கவனத்தையும் ராணுவ வளங்களையும் ஆப்கானிஸ்தானில் இருந்து திசை திருப்பியது.

மேலும், அமெரிக்காவின் முதன்மை நோக்கம் அல்-கொய்தாவை அழிப்பதில் இருந்து "தேசக் கட்டமைப்பு" என்ற திட்டத்திற்கு மாறியது. ஆனால் இராக்கை போலவே, இங்கும் அந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பது குறித்த தெளிவான உத்தியோ அல்லது ஒருமித்த கருத்தோ திட்டமிடப்படவில்லை.

தாலிபன்களின் வீழ்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட புதிய ராணுவம் மற்றும் காவல் படைகள் மிகவும் பலவீனமாக இருந்தன. அவை முற்றிலும் மேற்கத்திய நாடுகளின் நிதி மற்றும் ஆதரவையே நம்பியிருந்தன. இதன் விளைவாக, மேற்கத்திய படைகள் வெளியேறியவுடன் அவை விரைவாகச் சரிந்தன; மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முன்னேறி வந்த தாலிபன்களின் முன்னேற்றத்தை எதிர்கொள்ளத் தவறியபோது அவை விரைவாகச் சரிந்தன, இறுதியில் அடிப்படைவாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழகத்தின் போர் செலவுகள் திட்டத்தின் தரவுகள்படி, ஆப்கானிஸ்தானில் நடந்த 20 ஆண்டுக்கால அமெரிக்க தலையீடு மற்றும் அந்த மோதலுடன் தொடர்புடைய வன்முறைகளின் நேரடி விளைவாக, பொதுமக்கள், ஆப்கானிய வீரர்கள், தாலிபன்கள், மேற்கத்தியப் படைகள் என 1,76,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கணக்கீடு, போரினால் ஏற்பட்ட உறுதியற்ற தன்மையால் ஏற்படும் நோய் அல்லது பஞ்சத்தால் ஏற்படும் இறப்புகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பிற அளவுகோல்களின்படி பார்த்தால், உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

லிபியா

2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் ராணுவ தலையீட்டிற்குப் பிறகு பதவியிறக்கப்பட்ட மற்றொரு சர்வாதிகாரி லிபிய தலைவர் முஅம்மர் அல் கடாஃபி ஆவார்.

அவரது வீழ்ச்சி அரபு வசந்தம் போராட்டங்களின் ஒரு பகுதியாகும். 1969 முதல் இரும்புக்கரம் கொண்டு கடாஃபி நடத்தி வந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்கள் ஒடுக்குமுறையை சந்தித்தன. இதைத் தொடர்ந்து, அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே வெடித்த மோதல் நாடு முழுவதும் பரவியது.

இதற்குப் பதிலடியாக, ஐநா பாதுகாப்பு கவுன்சில் லிபிய வான்பரப்பை 'பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக' அறிவித்தது. கிளர்ச்சியாளர்களுக்கு உதவவும், பொது மக்களைப் பாதுகாக்கவும், அரசாங்கப் படைகளின் மீது குண்டுவீச்சு நடத்தவும் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நேட்டோ கூட்டாளிகளுடன் அமெரிக்காவும் இணைந்தது. உண்மையில் இந்த ராணுவ நடவடிக்கைக்கான முயற்சியை பிரான்ஸ்தான் முன்னெடுத்தது.

கிளர்ச்சியாளர்கள் திரிபோலி நகரைக் கைப்பற்றி, 2011 அக்டோபரில் கடாஃபியை பிடித்துக் கொன்றனர். ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் நடந்தது போலவே, லிபியாவிலும் மோதல் முடிவுக்கு வரவில்லை.

கடாஃபியின் வீழ்ச்சி மாபெரும் அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்தியது. இந்த வெற்றிடத்தை நிரப்ப கூட்டணி நாடுகளிடம் எந்தத் தீர்வும் இல்லை. இது பல்வேறு ஆயுதமேந்திய குழுக்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது.

இராக் அல்லது ஆப்கானிஸ்தானை போல மற்றுமொரு நீண்டகால மற்றும் செலவு மிகுந்த போரில் ஈடுபட விரும்பாத சர்வதேச படைகள், கடாஃபியின் மரணத்திற்குப் பிறகு தங்களது நேரடிப் போர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டன. அதற்குப் பதிலாக, ஆலோசனை மற்றும் பயிற்சிகளை வழங்குவதோடு, ஆயுதக் குழுக்களுக்கு எதிராக அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை நடத்துவதுடன் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டன.

கெய்ரோவிலுள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரியும் இப்ராஹிம் அவாத் கூறுகையில், "அமெரிக்காவின் லிபிய தலையீடு நாட்டை நிர்வகிப்பதற்கான எந்தத் திட்டமும் இன்றி செய்யப்பட்டது; இது உள்நாட்டுப் போருக்கே வழிவகுத்தது" என்றார். லிபியா ஒரு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும், புலம்பெயர்ந்தோரை ஏற்கும் நாடாகவும் இருந்ததால், இது கடுமையான பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தியது.

இன்று வரை லிபியா பிளவுபட்டும், ஸ்திரமற்ற நிலையிலுமே உள்ளது. திரிபோலியில் தேசிய ஒற்றுமை அரசாங்கம் நிறுவப்பட்டு சர்வதேச அங்கீகாரத்துடன் செயல்படுகிறது, ஆனால் அது முழு நாட்டையும் கட்டுப்படுத்தவில்லை, அதிகாரம் பல்வேறு குழுக்களிடையே சிதறிக் கிடக்கிறது.

சிரியா

கடந்த 2011இல் சர்வாதிகார ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி பல அரபு நாடுகளில் மக்கள் மேற்கொண்ட போராட்டங்களான அரபு வசந்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு நாடு சிரியா. பஷர் அல்-அசத்தின் அரசாங்கம் அமைதியான முறையில் நடந்த போராட்டங்களை ஒடுக்கியது. இது 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. இன்று அசத் ஆட்சி வீழ்ந்த போதிலும், அந்தப் போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

சிரியாவின் போரானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் கலந்த ஒரு பன்முக மோதலாக மாறியது. அரசாங்க ஆதரவுப் படைகள், மிதவாத கிளர்ச்சியாளர்கள், குர்துப் படைகள், அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அடிப்படைவாதக் குழுக்கள் எனப் பல தரப்பினர் நிலப்பரப்பைக் கைப்பற்றப் போட்டியிட்டனர். இது நாட்டின் அதிகார வரைபடத்தைத் தொடர்ந்து மாற்றியமைத்தது.

ரஷ்யாவும் இரானும் அசத் அரசாங்கத்திற்கு ராணுவ ரீதியாக ஆதரவளித்தன. அதே நேரம், அரசாங்கப் படைகளுக்கு எதிராகப் போராடிய சன்னி கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதங்கள், பயிற்சி மற்றும் நிதி உதவியை துருக்கி வழங்கியது.

2014ஆம் ஆண்டில், அமெரிக்காவும் இந்த மோதலில் இணைந்தது. சிரியாவின் பாதி நிலப்பரப்பையும், இராக்கின் மூன்றில் ஒரு பங்கையும் கட்டுப்படுத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை எதிர்ப்பதே அதன் முதன்மை நோக்கமாக இருந்தது.

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள், ஆயுதக் குழுக்களை பலவீனப்படுத்துவதில் வெற்றி பெற்றன, அவர்கள் சிரியாவின் பிராந்திய கட்டுப்பாட்டை இழந்தனர். அவர்களின் படை பலம் முழுமையாக அழிக்கப்படாவிட்டாலும், கணிசமாகக் குறைக்கப்பட்டன.

டொனால்ட் டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில், 2017-ஆம் ஆண்டில் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறி பஷர் அல்-அசத் அரசின் மீது அமெரிக்கா டொமாஹாக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

2013இல் அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி அசத் அரசாங்கம் தனது சொந்த மக்கள் மீதே ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திய போது, ஒபாமா வலுவான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

ரஷ்யாவின் உதவியால் அசத் ஆட்சியில் நீடித்தார். ஆனால் 2024இன் இறுதியில், அகமது ஷாரா தலைமையிலான 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' என்ற கிளர்ச்சிக் குழு டமாஸ்கஸை அடைந்தபோது, அசத் ஆட்சி சீட்டுக்கட்டு போலச் சரிந்தது.

அமெரிக்க ராணுவ தலையீடு, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அல்-கொய்தாவின் ஒரு கிளையாக இருந்து பின்னர் அதிலிருந்து பிரிந்த அல்-நுஸ்ரா முன்னணியின் முன்னாள் தலைவரான அல்-ஷாரா தலைமையிலான புதிய இடைக்கால அரசாங்கத்துடன் அமெரிக்கா தற்போது உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் இவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் வெகுமதியை அமெரிக்கா அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வன்முறையின் அளவு குறைந்திருந்தாலும், அந்த நாடு இன்னும் பல பிரிவுகளாகப் பிளவுபட்டு, நிலையற்றதாகவே இருக்கிறது.

ஏமன்

செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு, அரேபிய தீபகற்பத்திலுள்ள அல்-கொய்தா கிளைக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா பலமுறை ஏமனிலும் தலையிட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில், இரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவை கைப்பற்றிய பிறகு, ஏமன் உள்நாட்டுப் போரில் மூழ்கியது. 2015இல் செளதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டணி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தலையிட்ட போது, அமெரிக்கா அவர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ததோடு, தளவாடம் மற்றும் உளவுத் தகவல்களையும் வழங்கியது. இருப்பினும், அது தரையில் தனது படைகளை நிலைநிறுத்தவில்லை.

ஹூதி கிளர்ச்சிக் குழு என்பது தற்போது ஏமனின் சுமார் 30% நிலப்பரப்பைக் கட்டுப்படுத்தும் ஷியா பிரிவைச் சார்ந்த ஓர் இயக்கமாகும். ஏமனில் அடிப்படைவாத மற்றும் அடக்குமுறை ஆட்சியை நிறுவியுள்ள இந்த இயக்கத்தின் மீது கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

காஸா போரின் பின்னணியில், இந்தக் குழு செங்கடலில் கப்பல்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது. இதைத் தொடர்ந்து, கடல்வழிப் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, அமெரிக்கா தனது கூட்டாளியான பிரிட்டனுடன் இணைந்து ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.

மத்திய கிழக்கிலேயே மிகவும் ஏழ்மையான நாடான ஏமன், பல ஆண்டுகளாக நீடிக்கும் ஸ்திரமற்ற தன்மையால் மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரசாரம் என்ற அமைப்பின் தகவல்படி, 2023 வரை 3,77,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலான உயிரிழப்புகள், மோதலின் மறைமுக விளைவுகளான பசி, நோய் மற்றும் அடிப்படை சேவைகளுக்கான அணுகல் இல்லாமையால் ஏற்பட்டவை.

ஐநா தரவுகளின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் சுமார் 80% பேர் உயிர் வாழ மனிதாபிமான உதவியையே நம்பியுள்ளனர். 40 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

2026 T 20 உலகக்கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டி இன்று பல்லேகல சர்வதேச மைதானத்தில் (16) இரவு இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்றது. 

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீரமானித்தது.

இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் அபாரமான அரைசதம் அடித்து அசத்தினர்

அதன்படி, 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு 182 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது அவுஸ்திரேலியா.

இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இலங்கை அணியின் முதல் ஜோடியாக பெதும் நிஸ்ஸங்க மற்றும் குசால் ஜனித் களமிறங்கினர்.

இதில் குசால் ஜனித் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் குசால் மெண்டிஸ்  பெதும் நிஸ்ஸங்க ஆகியோர் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி  அரை சதம் விளாசினர்.

 இந்த தொடரில் குசால் மெண்டிஸ் 3 அரை சதங்களை விளாசியிருந்தமை குறிப்பிடத்தகது

அதன் படி 2 விக்கொட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது இலங்கை 

0 reacts

2026ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இந்திய இளையோர் அணி, நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 411 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய அணி சார்பாக அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஸி 80 பந்துகளில் 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்

அணித்தலைவர் ஆயுஸ் மத்ரே 53 ஓட்டங்களையும், அபிக்யான் குண்டு 40 ஓட்டங்களையும், வேதாந்த் திரிவேதி 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் மின்டோ 03 விக்கெட்டுகளையும், செபஸ்டியன் மோர்கன் மற்றும் அலெக்ஸ் கிரீன் ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதன்படி, 412 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து இளையோர் அணி, 40.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 311 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது

இங்கிலாந்து அணி சார்பாக கலேப் பால்க்னர் அதிரடியாக துடுப்பாடி 115 ஓட்டங்களைப் பெற்றார்.

பென் டவ்கின்ஸ் 66 ஓட்டங்களையும், பென் மேயஸ் 45 ஓட்டங்களையும், அணித்தலைவர் தோமஸ் ரூ 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்

இதன்படி, 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 19 வயதுக்குட்பட்ட இளையோர் இந்திய அணி இன்று உலக கிண்ணத்தை கைப்பற்றியது.

புதிய சிறப்பு வர்த்தமானியின் கீழ், இலங்கை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் விருந்தோம்பல் மற்றும் உணவு சேவைத் துறைகளில் இரவுப் பணிகளில் ஈடுபட அனுமதித்துள்ளது. முதலாளிகள் மாலை 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து, தேவையான இடங்களில் பொருத்தமான தங்குமிடம் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய சட்டப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளனர்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் கோலாகலமாக நடைபெற்ற 41 ஆவது Mrs. World 2024 அழகிப் போட்டியில், இலங்கை இரண்டாவது ரன்னர்-அப் (2nd Runner-up) இடத்தைப் பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கையை சேர்ந்த சபினா யூசுப் என்பவரே இரண்டாவது ரன்னர்-அப் இடத்தை பெற்றுள்ளார்.

 2025 இல் இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடு – இந்தியா

கொழும்பு: 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 23 இலட்சம் (2.3 million) ஆக பதிவாகியுள்ளதுடன், அதில் இந்திய சுற்றுலாப் பயணிகள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

அதிகாரபூர்வ அறிக்கையின்படி,

இந்தியா 5,31,511 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கையின் முதன்மை மூல சந்தையாகத் தொடர்கிறது. இது இரண்டாவது இடத்தில் உள்ள நாட்டை விட இரட்டிப்புக்கும் அதிகமான வருகை ஆகும்.

 கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 114,000-க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளனர்.

மொத்தமாக, 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா வருகையில் 15% வருடாந்த வளர்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியம் (UK) 21,277 வருகைகளுடன் இரண்டாவது பெரிய சந்தையாக தன்னை நிலைநாட்டியுள்ளது.

மாதாந்த அடிப்படையில், இந்திய சுற்றுலாப் பயணிகள் சராசரியாக 23% பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

டிசம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 56,715 இந்தியர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்

பிப்ரவரி மாதத்தில் குறைந்தபட்சமாக 35,000 பேர் வருகை தந்துள்ளனர்

டிசம்பர் மாத மொத்த வருகை 2,58,928 ஆக பதிவாகி, அது ஆண்டின் உயர்ந்த மாத வருகையாக அமைந்துள்ளது. இது இலங்கை ஒரு முக்கிய விடுமுறை சுற்றுலா தலமாக நிலைபெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது என சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், ஐரோப்பா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியங்கள் இணைந்து மொத்த வருகைகளில் 92.7% பங்களிப்பை வழங்குகின்றன. இதில் ஐரோப்பா மட்டும் 51.3% பங்களிப்பை வழங்கி, இலங்கை ஒரு குளிர்கால சூரிய சுற்றுலா (Winter Sun Destination) நாடாக தன்னை உறுதிப்படுத்தியுள்ளது.

#SriLankaTourism #TouristArrivals #IndiaLeads #IndianTourists #Tourism2025 #VisitSriLanka #TravelNews #SouthAsiaTourism #WinterSunDestination #SLTourism #TamilNews #SriLanka #India #LKA

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா இன்று (30-12-2025 செவ்வாய்க்கிழமை), காலமானார். அவருக்கு வயது 80. வங்கதேச தேசியவாதக் கட்சியின் ஊடகப் பிரிவு அவரது மரணத்தை ஃபேஸ்புக் வாயிலாக அறிவித்தது.

"பிஎன்பி தலைவரும் முன்னாள் பிரதமருமான பேகம் கலீதா ஜியா இன்று அதிகாலை 6 மணிக்கு, ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு காலமானார்," என்று வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 25-ஆம் தேதி லண்டனிலிருந்து டாக்கா திரும்பினார். அவர் திரும்பிய ஐந்து நாட்களுக்குப் பிறகு, கலீதா ஜியா தனது இறுதி மூச்சை விட்டுள்ளார்.

பேகம் ஜியா 1991-ல் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரானார். 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த அவர் 2006-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். பிஎன்பி கடந்த மூன்று தேர்தல்களைப் புறக்கணித்துள்ளது. 2024-ல் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கத்திற்கு கலீதா ஜியா ஆதரவளித்தார். பிஎன்பி தற்போது வங்கதேசத்தின் மிகப்பெரிய கட்சியாக உள்ளது, அடுத்த ஆண்டு தேர்தல்களில் அது ஆட்சிக்கு வரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது

2025 ஆம் ஆண்டிற்கான 2,333,797வது பார்வையாளர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததன் மூலம், இலங்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருடாந்த, சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது, 

இது 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட முந்தைய அனைத்து நேர சாதனையையும் அதிகாரப்பூர்வமாக முறியடித்துள்ளது. ✈️🇱🇰

 "வரலாற்றில் அரிதாகவே ஒரு தருணம் வரும் - அப்போது நாம் பழையதிலிருந்து புதியதுக்குள் ஒரு அடியை எடுத்து வைக்கிறோம்," என புதன்கிழமையன்று நியூயார்க்கில் உற்சாகமாக கூடிய மக்கள் மத்தியில் ஸோஹ்ரான் மம்தானி கூறினார்.

1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய புகழ்பெற்ற உரையை மேற்கோள் காட்டி, மம்தானி பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மம்தானி, "ஒரு யுகம் முடிவடையும் போது, ஒரு தேசத்தின் ஆன்மா தனது குரலை வெளிப்படுத்துகிறது. இன்று நாம் பழையதை விட்டு புதியதை நோக்கி செல்கிறோம்," என்றார்.

மம்தானி வெற்றி உரையை முடிந்தவுடன், 2004-ல் வெளியான பாலிவுட் திரைப்படமான தூம் படத்தின் பாடல் அரங்கில் ஒலித்தது.

பின்னர், ஜே-ஸி மற்றும் அலிசியா கீஸின் எம்பயர் ஸ்டேட் ஆஃப் மைண்ட் பாடல் ஒலித்தது. நியூயார்க்கின் முதல் இந்திய வம்சாவளி மேயராக, மம்தானி வரலாறு படைத்த தருணத்தில், இந்தப் பாடல் புதிய அர்த்தத்தைப் பெற்றது.

பெண்கள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்தது இந்திய அணி.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளைத் தொடர்ந்து இங்கிலாந்திடமும் தோல்வியைச் சந்தித்திருந்தது.

இந்த போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் இந்தியாவின் கைகளில் இருந்து நழுவியது போல தோன்றியது.

251 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்கா, 144/6 என்ற நிலையில் இருந்தது. இருந்தாலும், இந்தியா அந்தப் போட்டிடியில் தோற்றது.

ஆஸ்திரேலியாவோ சேஸிங்கில் உலக சாதனை (அன்றைய தேதிக்கு) படைத்து இந்தியாவை வீழ்த்தியது.

விளம்பரம்

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கூட 10 ஓவர்களில் 62 ரன்கள் தேவை என்ற நிலையில்தான் இந்தியா இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்க, இந்திய பேட்டர்கள் இலக்கை எட்டிவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது, இருந்தாலும் தோல்வியே மிஞ்சியது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
இந்தியாவில் கிடைத்த வாசுகி பாம்புதான் உலகிலேயே நீளமானதா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
இந்தியாவில் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி' பாம்பின் உணவும் வேட்டை முறைகளும் என்ன? ஆய்வாளர்கள் தகவல்
'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, ஆனால்..!' ஏர் இந்தியா விபத்தில் தப்பியர் கூறுவது என்ன?
ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய ஒரேயொரு நபர் இப்போது எப்படி இருக்கிறார்?
ஆந்திர கூட்ட நெரிசல், ஸ்ரீகாகுளம் கோட்டா நெரிசல், கோவில் கூட்ட நெரிசல் 
'திருப்பதியில் முழுமையான தரிசனம் கிடைக்காததால் தனியே கோவில் கட்டினேன்' - யார் இவர்?
மகளிர் உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - தென் ஆப்ரிக்கா
சச்சின், கோலி வாழ்த்து: உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசு எவ்வளவு?
End of அதிகம் படிக்கப்பட்டது
பலமான அணியாகக் கருதப்பட்ட இந்தியா சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கோப்பையில் அடுத்தடுத்து மூன்று தோல்விகளைச் சந்தித்தது.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,முதல் முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது இந்தியா
ஆனால், இரண்டு வாரங்கள் கழித்து இப்போது இந்த ஞாயிறு இந்தியாவுக்கானதாக மலர்ந்தது. அன்று தொடர் தோல்விகளைச் சந்தித்த அதே அணி, இன்று உலக சாம்பியன் ஆகியிருக்கிறது.

மூன்று தொடர் தோல்விகளுக்கும் வெற்றிக்கும் இடையிலான இந்த இரண்டு வாரங்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன? அந்தத் தோல்விகளில் இருந்து இந்தியா மீண்டு வந்தது எப்படியென்று, சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரனிடம் பிபிசி தமிழ் பேசியது.

பொறுப்பெடுத்துக்கொண்ட சீனியர்கள்
இந்திய அணியின் எழுச்சிக்கு மிக முக்கியக் காரணமாக ஆர்த்தி சங்கரன் சொல்வது, ''இந்திய சீனியர் வீராங்கனைகள் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதுதான்''

"அந்தத் தோல்விகளுக்குப் பின் சீனியர் வீராங்கனைகள் தங்கள் கைகளில் பொறுப்புகளை எடுத்துக்கொண்டனர். தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இது அணிக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்" என்று கூறினார் அவர்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 60 பந்துகளுக்கு 62 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்றுவிடும் நிலை இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன.

இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்திருக்க, 88 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த ஸ்மிரிதி மந்தனா, ஒரு பந்தை தூக்கி அடித்து அவுட் ஆனார். அதன்பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ 4 ரன்களில் தோல்வியடைந்தது இந்தியா.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கையில் எடுத்துக்கொண்டது மாற்றத்தை ஏற்படுத்தியது என்கிறார் ஆர்த்தி சங்கரன்
இந்தத் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்மிரிதி மந்தனா, "எங்கள் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம். அந்த சரிவு என்னிடம் இருந்து தொடங்கியதால் நான் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆட்டத்தை இறுதி வரையிலும் எடுத்துச் சென்றிருக்கவேண்டும். என் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம்" என்று கூறினார்.

இப்படி ஒரு முன்னணி வீராங்கனை பொறுப்பை தன் மீது எடுத்துக்கொண்டது திருப்புமுனை ஏற்படுத்திய விஷயம் என்கிறார் ஆர்த்தி.

இந்த அணுகுமுறையை கடைசி இரண்டு போட்டிகளில் தீப்தி ஷர்மாவின் பேட்டிங்கிலுமே பார்க்க முடிந்தது. களமிறங்கியதும் செட்டில் ஆக சில பந்துகள் எடுத்துக்கொண்டு, மெல்ல தன் ஆட்டத்துக்குள் செல்பவர் தீப்தி ஷர்மா. அதுதான் அவரது அணுகுமுறை. ஆனால், அரையிறுதியிலும் இறுதிப் போட்டியிலும் வேறொரு அணுகுமுறையை அவரிடம் பார்க்க முடிந்தது.

அரையிறுதியில் 338 ரன்களை இந்திய அணி சேஸ் செய்ததால், செட்டில் ஆக தீப்தி ஒரு பந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வந்ததில் இருந்தே அதிரடி காட்டியவர், 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டே டாட் பால்கள்தான் ஆடினார். கடினமான சிங்கிள்களைத் தவிர்க்கும் அவர், ரிஸ்க் எடுத்து ஓடி ரன் அவுட்டும் ஆனார்.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,நாக் அவுட் போட்டிகளில் பேட்டிங்கில் தீப்தியின் அணுகுமுறையில் மாற்றம் தெரிந்தது
இறுதிப் போட்டியில் கூட தீப்தி அதைத்தான் செய்தார். "ஷஃபாலி, ஜெமி இருவரும் அடுத்தடுத்து அவுட்டான பிறகு, ஹர்மனும் மெதுவாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். அந்த இடத்தில் ரன் ரேட் பெரிய அடி வாங்கியிருக்கும். ஆனால், அப்படி ஏற்படாமல் தீப்திதான் பார்த்துக்கொண்டார். இல்லையெனில் இந்தியா அந்த கட்டத்தில் பின் தங்கியிருந்திருக்கும்" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.

இறுதிப் போட்டியில் தீப்தி 58 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வெளியேறிய பிறகும் இந்தியாவின் ரன் ரேட் சீராக இருந்ததற்கு முக்கியக் காரணமாக விளங்கியிருந்தார் தீப்தி.

சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டதை முக்கியக் காரணமாகக் கூறும் ஆர்த்தி சங்கரன், சில டெக்னிக்கலான காரணங்களையும் குறிப்பிட்டார்.

சரியான காம்பினேஷனும், மாறிய பேட்டிங் ஆர்டரும்
"காம்பினேஷனை சரியாகக் கண்டறிந்து, ஆறாவது பௌலரை சேர்த்தது இந்த மாற்றத்துக்கான முக்கியமான விஷயம். அது ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணிக்குத் தேவைப்பட்டது" என்கிறார் ஆர்த்தி சங்கரன்.

அதிக பேட்டிங் ஆப்ஷன்கள் வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் இந்திய அணி 5 பௌலர்களை மட்டுமே அணியில் எடுத்திருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 330 ரன்களை டிஃபண்ட் செய்ய முடியாததற்கும் அது காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அதை சரிசெய்தது இந்திய அணி. அடுத்த போட்டிகளில் 6 பௌலிங் ஆப்ஷன்கள் இருப்பதுபோல் அணியை மாற்றினார்கள்.

அதேபோல், பேட்டிங் ஆர்டரையும் ஒரேபோல் வைத்திருக்காமல் மாற்றியதும் முக்கியக் காரணம் என்றும், குறிப்பாக ஜெமிமா ரோட்ரிக்ஸை நம்பர் 3 இடத்தில் ஆடவைத்ததும் இந்த மாற்றத்துக்கான ஒரு முக்கியம் என்றும் ஆர்த்தி சங்கரன் குறிப்பிட்டார்.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஜெமிமா நம்பர் 3 பொசிஷனில் களமிறங்கியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது
வழக்கமாக ஐந்தாவது ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டு வந்த ஜெமிமாவை, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெளியே அமர்த்தியது இந்திய நிர்வாகம்.

ஆனால், அடுத்த போட்டியிலேயே அவரை அணிக்குக் கொண்டு வந்ததோடு, மூன்றாவது வீரராகவும் களமிறக்கினார்கள். அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார் ஜெமிமா.

அதற்கு முன் ஆடிய 55 போட்டிகளில் மூன்று முறை மட்டுமே மூன்றாவது வீரராகக் களமிறங்கியிருந்தார் ஜெமிமா.

அந்த நியூசிலாந்து போட்டியில் கூட அவர் முதலில் ஐந்தாவது இடத்தில் தான் ஆடுவதாக இருந்தது. ஓப்பனர்கள் 33 ஓவர்கள் ஆடிவிட்டதால் அவரை மூன்றாவது வீரராகக் களமிறக்கினார்கள்.

அதேபோல் அரையிறுதியில் கூட களமிறங்குவதற்கு 10 நிமிடம் முன்புதான்தான் அந்த இடத்தில் விளையாடப்போவது பற்றி அணி நிர்வாகம் கூறியதாகச் சொல்லியிருந்தார் ஜெமிமா.

அந்த மாற்றம் அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தக் காரணமாக அமைந்தது.

இப்படி முன்கூட்டியே செய்திருந்த பேட்டிங் ஆர்டர் திட்டங்களை மாற்றியது சாதகமான அம்சம் என்று குறிப்பிட்டார் ஆர்த்தி சங்கரன்.

ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்சி
அந்தத் தோல்விகளுக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்ஸியிலும் நல்ல மாற்றங்கள் தெரிந்ததாகக் குறிப்பிட்டார் ஆர்த்தி. குறிப்பாக ஃபீல்ட் செட் அப் பல தருணங்களில் மிகவும் துல்லியமாக இருந்ததாக அவர் கூறினார்.

"சமீபத்திய போட்டிகளில் இந்தியா ஃபீல்டிங் செய்தபோது பௌண்டரிகள் தடுக்கப்பட்ட விகிதம் அதிகரித்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஃபீல்டிங் திறன் சிறப்பாக இருந்ததோடு, சரியான இடங்களில் சரியான ஃபீல்டர்களை நிற்க வைத்ததும் இதில் முக்கியக் காரணம்" என்றார் ஆர்த்தி.

இறுதிப் போட்டியில் கூட இதைப் பார்க்க முடிந்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் விக்கெட் வீழ்ந்ததே இப்படி நல்ல ஃபீல்டிங் செட் அப் மற்றும் துல்லியமான ஃபீல்டிங்கால்தான்.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,ஃபீல்டிங்கில் ஹர்மன்ப்ரீத் கவுர் எடுத்த முடிவுகள் சிறப்பாக இருந்ததாகக் கூறுகிறார் ஆர்த்தி சங்கரன்
அவுட் ஆவதற்கு முந்தைய பந்தை டாஸ்மின் பிரிட்ஸ் கவர் திசையில் அடித்துவிட்டு ஓட முயற்சி செய்தார். ஆனால், சிறப்பாக ஃபீல்டிங் செய்து ரன் ஓட விடாமல் ஜெமிமா தடுத்தார்.

அடுத்த பந்தை மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு பிரிட்ஸ் ரன் எடுக்க முயற்சி செய்ய, டைரக்ட் ஹிட் மூலம் அவரை அவுட்டாக்கினார் அமஞ்சோத் கவுர்.

இந்தியாவின் இரண்டு சிறந்த ஃபீல்டர்களை முக்கியமான அந்த இடங்களில் நிறுத்தி வைத்திருந்ததும், அவர்களும் சிறப்பாகச் செயல்பட்டதும்தான் விக்கெட் கணக்கை தொடங்கிவைத்தது.

அதுமட்டுமல்ல, ஜாஃப்தா அவுட்டானபோது, அந்த கேட்சைப் பிடித்த ராதா யாதவ் ஷார்ட் மிட் ஆன் பொசிஷனில் வழக்கத்தைவிட மிகவும் நேராக நின்றிருந்தார்.

அதுபோக, பிரிட்ஸுக்கு 'சில்லி மிட் ஆன்' ஃபீல்டர் கூட (அங்கும் ஜெமிமா) வைத்திருந்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். இப்படியான ஃபீல்ட் பொசிஷன்கள் போட்டியில் நல்ல தாக்கம் ஏற்படுத்தின.

ஆனால், இதற்கு முன்பாக இதே ஃபீல்டிங் செட் அப் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன், இந்தியாவின் ஃபீல்டிங் செட் அப் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அது அந்தத் தோல்விகளுக்குப் பின் நன்றாகவே மாறியிருக்கிறது.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இரு வாரங்கள் முன்பு தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்த இந்தியா, இப்போது உலக சாம்பியன் ஆகியிருக்கிறது
"ஆட்டம் பற்றிய விழிப்புணர்வு இறுதிப் போட்டியில் ஹர்மனிடம் நன்றாகத் தெரிந்தது" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.

அந்தத் தொடர் தோல்விகளுக்கு பிறகு இந்திய அணி தங்கள் தவறுகளை ஏற்றுத் திருத்திக் கொண்டதும், சீனியர் வீராங்கனைகள் பொறுப்புகளை தங்கள் கைகளிலும் எடுத்துக்கொண்டது இந்த மாற்றத்தின் மிக முக்கியமாகக் காரணமாக விளங்கியது என்று கருதுகிறார் ஆர்த்தி.

பெண்கள் உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்தது இந்திய அணி.

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளைத் தொடர்ந்து இங்கிலாந்திடமும் தோல்வியைச் சந்தித்திருந்தது.

இந்த போட்டிகளில் வெற்றி வாய்ப்புகள் இந்தியாவின் கைகளில் இருந்து நழுவியது போல தோன்றியது.

251 ரன்களை சேஸ் செய்த தென்னாப்பிரிக்கா, 144/6 என்ற நிலையில் இருந்தது. இருந்தாலும், இந்தியா அந்தப் போட்டிடியில் தோற்றது.

ஆஸ்திரேலியாவோ சேஸிங்கில் உலக சாதனை (அன்றைய தேதிக்கு) படைத்து இந்தியாவை வீழ்த்தியது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கூட 10 ஓவர்களில் 62 ரன்கள் தேவை என்ற நிலையில்தான் இந்தியா இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்க, இந்திய பேட்டர்கள் இலக்கை எட்டிவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது, இருந்தாலும் தோல்வியே மிஞ்சியது.

இந்தியாவில் கிடைத்த வாசுகி பாம்புதான் உலகிலேயே நீளமானதா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

இந்தியாவில் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி' பாம்பின் உணவும் வேட்டை முறைகளும் என்ன? ஆய்வாளர்கள் தகவல்

'

மகளிர் உலகக்கோப்பை, இந்தியா சாம்பியன், இந்தியா - தென் ஆப்ரிக்கா

சச்சின், கோலி வாழ்த்து: உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பரிசு எவ்வளவு?

End of அதிகம் படிக்கப்பட்டது

பலமான அணியாகக் கருதப்பட்ட இந்தியா சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கோப்பையில் அடுத்தடுத்து மூன்று தோல்விகளைச் சந்தித்தது.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,முதல் முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது இந்தியா

ஆனால், இரண்டு வாரங்கள் கழித்து இப்போது இந்த ஞாயிறு இந்தியாவுக்கானதாக மலர்ந்தது. அன்று தொடர் தோல்விகளைச் சந்தித்த அதே அணி, இன்று உலக சாம்பியன் ஆகியிருக்கிறது.

மூன்று தொடர் தோல்விகளுக்கும் வெற்றிக்கும் இடையிலான இந்த இரண்டு வாரங்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன? அந்தத் தோல்விகளில் இருந்து இந்தியா மீண்டு வந்தது எப்படியென்று, சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு - தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரனிடம் பிபிசி தமிழ் பேசியது.

பொறுப்பெடுத்துக்கொண்ட சீனியர்கள்

இந்திய அணியின் எழுச்சிக்கு மிக முக்கியக் காரணமாக ஆர்த்தி சங்கரன் சொல்வது, ''இந்திய சீனியர் வீராங்கனைகள் பொறுப்பை தங்கள் கையில் எடுத்துக்கொண்டதுதான்''

"அந்தத் தோல்விகளுக்குப் பின் சீனியர் வீராங்கனைகள் தங்கள் கைகளில் பொறுப்புகளை எடுத்துக்கொண்டனர். தோல்விகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இது அணிக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்" என்று கூறினார் அவர்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 60 பந்துகளுக்கு 62 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்றுவிடும் நிலை இருந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன.

இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்திருக்க, 88 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த ஸ்மிரிதி மந்தனா, ஒரு பந்தை தூக்கி அடித்து அவுட் ஆனார். அதன்பிறகு தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழ 4 ரன்களில் தோல்வியடைந்தது இந்தியா.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கையில் எடுத்துக்கொண்டது மாற்றத்தை ஏற்படுத்தியது என்கிறார் ஆர்த்தி சங்கரன்

இந்தத் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்மிரிதி மந்தனா, "எங்கள் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம். அந்த சரிவு என்னிடம் இருந்து தொடங்கியதால் நான் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஆட்டத்தை இறுதி வரையிலும் எடுத்துச் சென்றிருக்கவேண்டும். என் ஷாட் தேர்வு சிறப்பாக இருந்திருக்கலாம்" என்று கூறினார்.

இப்படி ஒரு முன்னணி வீராங்கனை பொறுப்பை தன் மீது எடுத்துக்கொண்டது திருப்புமுனை ஏற்படுத்திய விஷயம் என்கிறார் ஆர்த்தி.

இந்த அணுகுமுறையை கடைசி இரண்டு போட்டிகளில் தீப்தி ஷர்மாவின் பேட்டிங்கிலுமே பார்க்க முடிந்தது. களமிறங்கியதும் செட்டில் ஆக சில பந்துகள் எடுத்துக்கொண்டு, மெல்ல தன் ஆட்டத்துக்குள் செல்பவர் தீப்தி ஷர்மா. அதுதான் அவரது அணுகுமுறை. ஆனால், அரையிறுதியிலும் இறுதிப் போட்டியிலும் வேறொரு அணுகுமுறையை அவரிடம் பார்க்க முடிந்தது.

அரையிறுதியில் 338 ரன்களை இந்திய அணி சேஸ் செய்ததால், செட்டில் ஆக தீப்தி ஒரு பந்து கூட எடுத்துக்கொள்ளவில்லை. வந்ததில் இருந்தே அதிரடி காட்டியவர், 17 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டே டாட் பால்கள்தான் ஆடினார். கடினமான சிங்கிள்களைத் தவிர்க்கும் அவர், ரிஸ்க் எடுத்து ஓடி ரன் அவுட்டும் ஆனார்.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,நாக் அவுட் போட்டிகளில் பேட்டிங்கில் தீப்தியின் அணுகுமுறையில் மாற்றம் தெரிந்தது

இறுதிப் போட்டியில் கூட தீப்தி அதைத்தான் செய்தார். "ஷஃபாலி, ஜெமி இருவரும் அடுத்தடுத்து அவுட்டான பிறகு, ஹர்மனும் மெதுவாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். அந்த இடத்தில் ரன் ரேட் பெரிய அடி வாங்கியிருக்கும். ஆனால், அப்படி ஏற்படாமல் தீப்திதான் பார்த்துக்கொண்டார். இல்லையெனில் இந்தியா அந்த கட்டத்தில் பின் தங்கியிருந்திருக்கும்" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.

இறுதிப் போட்டியில் தீப்தி 58 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வெளியேறிய பிறகும் இந்தியாவின் ரன் ரேட் சீராக இருந்ததற்கு முக்கியக் காரணமாக விளங்கியிருந்தார் தீப்தி.

சீனியர்கள் பொறுப்புகளை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டதை முக்கியக் காரணமாகக் கூறும் ஆர்த்தி சங்கரன், சில டெக்னிக்கலான காரணங்களையும் குறிப்பிட்டார்.

சரியான காம்பினேஷனும், மாறிய பேட்டிங் ஆர்டரும்

"காம்பினேஷனை சரியாகக் கண்டறிந்து, ஆறாவது பௌலரை சேர்த்தது இந்த மாற்றத்துக்கான முக்கியமான விஷயம். அது ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணிக்குத் தேவைப்பட்டது" என்கிறார் ஆர்த்தி சங்கரன்.

அதிக பேட்டிங் ஆப்ஷன்கள் வேண்டும் என்பதற்காக தொடக்கத்தில் இந்திய அணி 5 பௌலர்களை மட்டுமே அணியில் எடுத்திருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 330 ரன்களை டிஃபண்ட் செய்ய முடியாததற்கும் அது காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அதை சரிசெய்தது இந்திய அணி. அடுத்த போட்டிகளில் 6 பௌலிங் ஆப்ஷன்கள் இருப்பதுபோல் அணியை மாற்றினார்கள்.

அதேபோல், பேட்டிங் ஆர்டரையும் ஒரேபோல் வைத்திருக்காமல் மாற்றியதும் முக்கியக் காரணம் என்றும், குறிப்பாக ஜெமிமா ரோட்ரிக்ஸை நம்பர் 3 இடத்தில் ஆடவைத்ததும் இந்த மாற்றத்துக்கான ஒரு முக்கியம் என்றும் ஆர்த்தி சங்கரன் குறிப்பிட்டார்.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜெமிமா நம்பர் 3 பொசிஷனில் களமிறங்கியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது

வழக்கமாக ஐந்தாவது ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டு வந்த ஜெமிமாவை, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெளியே அமர்த்தியது இந்திய நிர்வாகம்.

ஆனால், அடுத்த போட்டியிலேயே அவரை அணிக்குக் கொண்டு வந்ததோடு, மூன்றாவது வீரராகவும் களமிறக்கினார்கள். அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார் ஜெமிமா.

அதற்கு முன் ஆடிய 55 போட்டிகளில் மூன்று முறை மட்டுமே மூன்றாவது வீரராகக் களமிறங்கியிருந்தார் ஜெமிமா.

அந்த நியூசிலாந்து போட்டியில் கூட அவர் முதலில் ஐந்தாவது இடத்தில் தான் ஆடுவதாக இருந்தது. ஓப்பனர்கள் 33 ஓவர்கள் ஆடிவிட்டதால் அவரை மூன்றாவது வீரராகக் களமிறக்கினார்கள்.

அதேபோல் அரையிறுதியில் கூட களமிறங்குவதற்கு 10 நிமிடம் முன்புதான்தான் அந்த இடத்தில் விளையாடப்போவது பற்றி அணி நிர்வாகம் கூறியதாகச் சொல்லியிருந்தார் ஜெமிமா.

அந்த மாற்றம் அரையிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தக் காரணமாக அமைந்தது.

இப்படி முன்கூட்டியே செய்திருந்த பேட்டிங் ஆர்டர் திட்டங்களை மாற்றியது சாதகமான அம்சம் என்று குறிப்பிட்டார் ஆர்த்தி சங்கரன்.

ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்சி

அந்தத் தோல்விகளுக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் கவுரின் கேப்டன்ஸியிலும் நல்ல மாற்றங்கள் தெரிந்ததாகக் குறிப்பிட்டார் ஆர்த்தி. குறிப்பாக ஃபீல்ட் செட் அப் பல தருணங்களில் மிகவும் துல்லியமாக இருந்ததாக அவர் கூறினார்.

"சமீபத்திய போட்டிகளில் இந்தியா ஃபீல்டிங் செய்தபோது பௌண்டரிகள் தடுக்கப்பட்ட விகிதம் அதிகரித்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஃபீல்டிங் திறன் சிறப்பாக இருந்ததோடு, சரியான இடங்களில் சரியான ஃபீல்டர்களை நிற்க வைத்ததும் இதில் முக்கியக் காரணம்" என்றார் ஆர்த்தி.

இறுதிப் போட்டியில் கூட இதைப் பார்க்க முடிந்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் விக்கெட் வீழ்ந்ததே இப்படி நல்ல ஃபீல்டிங் செட் அப் மற்றும் துல்லியமான ஃபீல்டிங்கால்தான்.

இந்தியா உலக சாம்பியன்பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஃபீல்டிங்கில் ஹர்மன்ப்ரீத் கவுர் எடுத்த முடிவுகள் சிறப்பாக இருந்ததாகக் கூறுகிறார் ஆர்த்தி சங்கரன்

அவுட் ஆவதற்கு முந்தைய பந்தை டாஸ்மின் பிரிட்ஸ் கவர் திசையில் அடித்துவிட்டு ஓட முயற்சி செய்தார். ஆனால், சிறப்பாக ஃபீல்டிங் செய்து ரன் ஓட விடாமல் ஜெமிமா தடுத்தார்.

அடுத்த பந்தை மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு பிரிட்ஸ் ரன் எடுக்க முயற்சி செய்ய, டைரக்ட் ஹிட் மூலம் அவரை அவுட்டாக்கினார் அமஞ்சோத் கவுர்.

இந்தியாவின் இரண்டு சிறந்த ஃபீல்டர்களை முக்கியமான அந்த இடங்களில் நிறுத்தி வைத்திருந்ததும், அவர்களும் சிறப்பாகச் செயல்பட்டதும்தான் விக்கெட் கணக்கை தொடங்கிவைத்தது.

அதுமட்டுமல்ல, ஜாஃப்தா அவுட்டானபோது, அந்த கேட்சைப் பிடித்த ராதா யாதவ் ஷார்ட் மிட் ஆன் பொசிஷனில் வழக்கத்தைவிட மிகவும் நேராக நின்றிருந்தார்.

அதுபோக, பிரிட்ஸுக்கு 'சில்லி மிட் ஆன்' ஃபீல்டர் கூட (அங்கும் ஜெமிமா) வைத்திருந்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். இப்படியான ஃபீல்ட் பொசிஷன்கள் போட்டியில் நல்ல தாக்கம் ஏற்படுத்தின.

ஆனால், இதற்கு முன்பாக இதே ஃபீல்டிங் செட் அப் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன், இந்தியாவின் ஃபீல்டிங் செட் அப் இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார். அது அந்தத் தோல்விகளுக்குப் பின் நன்றாகவே மாறியிருக்கிறது.

படக்குறிப்பு,இரு வாரங்கள் முன்பு தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்த இந்தியா, இப்போது உலக சாம்பியன் ஆகியிருக்கிறது

"ஆட்டம் பற்றிய விழிப்புணர்வு இறுதிப் போட்டியில் ஹர்மனிடம் நன்றாகத் தெரிந்தது" என்று கூறினார் ஆர்த்தி சங்கரன்.

அந்தத் தொடர் தோல்விகளுக்கு பிறகு இந்திய அணி தங்கள் தவறுகளை ஏற்றுத் திருத்திக் கொண்டதும், சீனியர் வீராங்கனைகள் பொறுப்புகளை தங்கள் கைகளிலும் எடுத்துக்கொண்டது இந்த மாற்றத்தின் மிக முக்கியமாகக் காரணமாக விளங்கியது என்று கருதுகிறார் ஆர்த்தி.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.