இலங்கை இராணுவ கூட்டுப் படைகளின் 47 ஆவது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உபவேந்தராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு கெடெட் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்துள்ளார்.
இதேவேளை, இராணுவ கூட்டுப் படை பிரதி தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன.
